பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் சதி உள்ளதாக அவர் குடும்பத்தினர் சந்தேகிக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனுடன் நெருங்கி பழகிய பலர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் வீட்டில் ரத்தக் கறை படிந்த ஜாக்கெட் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புத்தம் புதிதாக இருந்த அந்த ஜாக்கெட் யாருக்கு? எப்படி மைக்கேல் ஜாக்சன் அறைக்குள் வந்தது என்று தெரியவில்லை.
அந்த ஜாக்கெட் பயன்படுத்தப்படாமல் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஜாக்கெட்டை போலீசார் கைப்பற்றவில்லை.
எனவே ஜாக்கெட்டில் படிந்துள்ள ரத்தம் யாருடையது என்பது தெரியாமலே போய் விட்டது. இந்த விவகாரம் மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment