கந்தசாமி - ஒரு வார வசூல் ரூ. 1 கோடியைத் தாண்டியது

கந்தசாமி' திரைப்படம் சென்னை நகர திரையரங்குகளில் ஒரே வாரத்தில் ரூ. 1 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 778-ஐ வசூல் செய்துள்ளது.

இந்தத் தகவலை, "கந்தசாமி' படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கியிருக்கும், அபிராமி மெகா மால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம், ஸ்ரேயா நடித்து வெளிவந்துள்ள "கந்தசாமி' திரைப்படம் சென்னை நகரில் மட்டும் 18 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

திரைப்படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்து வருவதால் சத்யம், ஐ ட்ரீமஸ், உதயம் உள்ளிட்ட திரையரங்குகளில் இந்த தொகை வசூலாகியுள்ளதாக "அபிராமி மெகா மால்' தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails