பிரதமர் மன்மோகன்சிங் இன்று ராஜஸ்தான் மாநிலம் ராம்சர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொக்ரானில் 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியது. அந்த சோதனை முழு வெற்றி பெறவில்லை என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தவறான முத்திரை விழுந்துள்ளது.
பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடந்ததாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார். எனவே பொக்ரான் அணுகுண்டு சோதனை தொடர்பான விஞ்ஞானிகளின் சர்ச்சை கருத்துக்கள் தேவை இல்லாதது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு தற்போது திருப்தி தரும் வகையில் ஊக்கம் அளிப்பதாக இல்லை. நமது நாட்டில் பருவ மழை பொய்த்ததால் வறட்சி சற்று கடுமையாக உள்ளது. அது விலைவாசியை பாதித்துள்ளது.
ஆனால் நம்மிடம் உணவு தானியப்பொருட்கள் தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. எனவே வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை, எளியவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்
0 comments:
Post a Comment