நெப்போலியனும், ஆர்.கே.வும் அண்ணன் தம்பிகள். அழகர் மலையில் வசிக்கின்றனர். ஆர்.கே சதா குடி கொண்டாட்டம் என திரிகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் பெண் தேடுகிறார்.
அதே ஊரில் வசிக்கம் நெப்போலியன் பகையாளி லால் சதி செய்து ஆர்.கே.வுக்கு திருமணம் நடக்க விடாமல் தடுக்கிறார். பெண் பித்தர், குடிகாரன் என்றெல்லாம் முத்திரை குத்தி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் ஆர்.கே.வை வெறுத்து பெண் கொடுக்க மறுக்கும்படி செய்து விடுகிறார்.
தன்னால் ஊரார் மத்தியில் அண்ணன் நெப்போலியனுக்கு அவமரியாதை ஏற்பட ஆர்.கே.வுக்கு மனமாற்றம். குடியை விடுகிறார். அப்போது தோழி வீட்டுக்கு வரும் பானு கண்ணில் பட காதல். இருவருக்கும் சென்னையில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆர்.கே.வை கொன்று திருமணத்தை நிறுத்த வில்லனை ஏவுகிறார் லால். அவனை முறியடித்து பானுவை ஆர்.கே. மணப்பது கிளைமாக்ஸ்....
ஆக்ஷன். காமெடி, சென்டிமெண்டில் அழுத்தமாக காலூன்றி புது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் ஆர்.கே. போதை தள்ளாட்டத்திலும் வடிவேலுவுடன் தண்ணி அடித்து கலாய்ப்பதிலும்... பானுவிடம் வடிவேலுவை காதல் தூது அனுப்பி சிக்கலில் மாட்ட வைக்கும் அப்பாவித்தனத்திலும் அசத்துகிறார்.
பானுவின் காதல் சீன் தொகுப்புகள் அழகானவை. வடிவேலு காமெடி பெரிய பலம். கிளாஸ் நிறைய மதுவை ஊற்றி தண்ணீரை தெளித்து குடிப்பது... காதலுக்கு ஐடியா கொடுத்து விட்டு பிரச்சினைகளில் மாட்டி உதைபடுவது பணத்தை திருட வந்த சோனாவிடம் காதல் வயப்படுவது என காமெடி தர்பாரே நடத்துகிறார்.
நெப்போலியன் பாசக்கார அண்ணனாக பளிச்சிடுகிறார். லால் மிரட்டல் வில்லன். இருவரும் காவி உடுத்தி சம்சாதிகளாய் வாழும் பிளாஸ்பேக் கதை அழுத்தமானது. சோனா கவர்ச்சி வில்லி. இளையராஜாவின் பாடல்களில் பழைய சுவை. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவிலும் குளிர்ச்சி.
குடும்ப உறவுகளின் பின்னணியில் காதல், பகை, காமெடி, சென்டிமென்ட் என கச்சிதமாக தொகுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். கதை ஓட்டத்தில் இன்னும் வலு சேர்த்து இருந்தால் கூடுதல் மெருகேறியிருக்கும்
0 comments:
Post a Comment