செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து இந்திய விண்வெளி மையம் ஆய்வு செய்து வருவதாக அதன் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.
தற்போது இது வெறும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு நடத்த விரும்பும் பிற நாடுகளிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டப் பணியை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். 2013-15-ம் ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
சந்திராயன்-2 திட்டத்துக்குப் பிறகே இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சந்திராயன்-1 திட்டம் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அது கைவிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கோவாவில் நடைபெறும் 8-வது சர்வதேச குறைந்த செலவிலான விண்வெளி பயண திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர், பல நாடுகள் குறைந்த செலவிலான விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறினார்.. சந்திராயன் -1 திட்டப் பணிக்கான செலவு ரூ. 400 கோடி.
இதேபோல குறைந்த செலவிலான பயண திட்டத்தையே செவ்வாய்க்கிரக திட்டத்துக்கும் வகுக்க உள்ளதாக அவர் கூறினார்
0 comments:
Post a Comment