செல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்து வழக்கு: பிப்ரவரி 12-க்கு தள்ளிவைப்பு

இயக்குநர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் தம்பதியின் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

"காதல் கொண்டேன்', "7ஜி ரெயின்போ காலனி', "புதுப்பேட்டை' ஆகிய படங்களை இயக்கியவர் செல்வராகவன். "காதல் கொண்டேன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால்.

இருவரும் சில ஆண்டுகள் காதலித்த பிறகு, 16.5.2006-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இன்னும் குழந்தையில்லை.

கருத்து வேறுபாடு காரணமாக சேர்ந்து வாழ விரும்பாததால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்து விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னையிலுள்ள குடும்ப நல முதன்மை நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails