அனாதை இளைஞர் ஷாம். கிறிஸ்தவ பாதிரியார் ராஜேஷால் வளர்த்து ஆளாக்கப்படுகிறார். ஊர் மக்களுக்காக உழைத்து நல்ல பெயர் எடுக்கிறார். மீனவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் மல்லிகாகபூருக்கு ஷாமின் சமூக சேவை பணிகளில் ஈர்க்கப்பட்டு காதல்.
வில்லன் லால் மீனவர்களை சுரண்டி வாழ்கிறார். அவர்கள் விற்கும் மீன்களை மிரட்டி குறைந்து விலைக்கு வாங்கி லாபம் சம்பாதிக்கிறார். லாலை ஷாம் தட்டி கேட்க மோதல். வில்லன் கோஷ்டியின் சமூக விரோத செயல்களை போலீசுக்கு சொல்ல, லால் கைதாகிறார். இதனால் ஆத்திரமாகும் அவர் அடியாட்கள் மூலம் ஷாமை வெட்டி கடலுக்குள் வீசுகிறார். அங்கிருந்து பிழைக்கும் ஷாம் வில்லன் கூட்டத்தை துவம்சம் செய்வது விறு விறுப்பான கிளைமாக்ஸ்...
ஷாம் `ஆக்ஷன்' அவதாரம் எடுத்துள்ளார். ஏழைகளுக்கு உதவுவதில் நிறைவு. மல்லிகா கபூர் காதல் டூயட் பாடுகிறார். இறுதியில் காதலனை ஊருக்கு தாரை வார்த்து பரிதாப பட வைக்கிறார். லால் மிரட்டல் வில்லன், விவேக் காமெடி பலம். சொந்தமாக படகு வாங்க அவர் படும் கஷ்டங்கள் கலகலப்பு.
காதல், தியாகம், ஆக்ஷன் என ஜனரஞ்சகமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சி.டி.பாண்டி. கதையை புதுமையாக சொல்லாதது குறை. தினா இசையும், சாண்டோனியா ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.
0 comments:
Post a Comment