சென்னை தியேட்டர்களில் “கந்தசாமி” படம் வசூல் சாதனை

சென்னையில் அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி, பால அபிராமி, சத்யம், சாந்தம், சாந்தி, சாய் சாந்தி, ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட், மெலோடி, ஐநாக்ஸ், ஐநாக்ஸ்-2, சங்கம், உதயம், சூரியன், கமலா, ஐடிரீம்ஸ், மகாராணி ஆகிய 18 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் 900 தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ஒரே நாளில் 95 லட்சத்து 22 ஆயிரத்து 498 ரூபாய் வசூல் ஆகியுள்ளது. 1 லட்சத்து 46 ஆயிரத்து 976 டிக்கெட்டுகள் முன்பதிவு மூலம் இத்தொகை கிடைத்துள்ளது.

இது பெரிய சாதனையாகும் என்று சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவரும் கந்தசாமி விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் தெரிவித்தார். “கந்தசாமி” படம் ஒரே நாளில் இவ்வளவு தொகை வசூலித்து இருப்பதை பார்க்கும்போது இந்த படம் ஒரு பிரமாண்டம் என்று மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறினார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails