Sunday, August 16, 2009

செல்போனில் விடியோ கான்ஃபரன்ஸிங் வசதி

செல்போனில் விடியோ கான்ஃபரன்ஸிங் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ-வைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இத்தகைய புதிய வசதியைப் பெறலாம். இப்புதிய சேவைக்கு மாதம் ரூ. 99 மட்டுமே கட்டணமாகும்.

இப்புதிய சேவையை அளிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் கோடியக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விடியோ கான்ஃபரன்ஸிங் வசதிக்கான தொழில்நுட்பத்தை கோடியக் நிறுவனம் அளிக்கும்.

இப்புதிய வசதியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் மற்றும் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பெறலாம். பிளாக்பெர்ரி, பிரூ, ஜாவா, சிம்பியான், விண்டோஸ் மொபைல்போன்களில் இத்தகைய வசதியைப் பெற முடியும்.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...