அவிரா இலவச ஆண்டி வைரஸ்

பல வாசகர்கள் தாங்கள் பயன்படுத்தும் இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள் சரியாக இயங்கவில்லை என்றும் சில நாட்களிலேயே வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றன என்று எழுதுகின்றனர். ஒரு சிலர் தானும் தன் நண்பரும் ஒரே நாளில் தங்கள் கம்ப்யூட்டர்களில் இலவச ஆண்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவியதாகவும் தன் நண்பரின் கம்ப்யூட்டரில் அரசு நன்றாகச் செயல்படுவதாகவும் தன் கம்ப்யூட்டரில் அது சரியாக செயல்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இலவச ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் சரியாகத்தான் செயல்படுகின்றன.கட்டணம் செலுத்தி வாங்கும் அதே புரோகிராமின் வேறு பதிப்புகளில் கூடுதல் வசதிகள் தரப்படும்.ஆனால் எந்த ஆண்டி வைரஸ் புரோகிராமாக இருந்தாலும் அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும்,இல்லை என்றால் அதன் செயல்பாடு பின் தங்கி பிரச்சினைகளைத் தரும்.

இந்த சிந்தனைகளுடன் இணையத்தில் சுற்றி வந்த போது அவிரா ஆண்டி வைரஸ்(Avira's Free antivirus) என்ற புரோகிராம் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கிடைப்பது தெரிய வந்தது.இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த போது இதன் பல சிறப்பம்சங்கள் தெரிய வந்தது.அது குறித்து தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

இதன் சிறப்புகளை சொல்வதென்றால் வைரஸ்கள் இந்த புரோகிராம் அறிந்து கொள்ளும் திறனை சொல்லலாம்.கம்ப்யூட்டர் சிஸ்டத்தை இது இயங்கும் போது சிரமப்படுத்துவதில்லை.ஷெட்யூல்,ஹெல்ப் பைல்,ரியல் டைம் ஸ்கேனர் ஆகியனவும் சிறப்பாக இயங்குகின்றன. இலவசம் மற்றும் கட்டணத் தொகுப்பு இருப்பதால் இலவசத் தொகுப்பு அவ்வளவாகத் திறமையுடன் செயல்படாது என்ற எண்ணம் ஏற்படும்.

இந்த தொகுப்பு அவ்வாறு இல்லை. இதன் வைரஸ் கண்டறியும் திறனைச் சோதித்தலில் 99.2 சதவிகித திறனைக் காட்டியது.அட்வேர் புரோகிராம்களை தடுப்பதில் 99.6 சதவிகித திறனைக் காட்டியது.இதில் உள்ள ஷெட்யூல் தரும் ஆப்சன்ஸ் வேறு எந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் தருவதை காட்டிலும் கூடுதலாகவே உள்ளது.

அவிரா இயங்குவதற்கு கம்ப்யூட்டர் மெமரியில் 2 எம்பிக்குக் குறைவாகவே எடுத்துக் கொள்வதால் கம்ப்யூட்டர் இயங்குவதில் பிரச்னை எதுவும் இல்லை.இதனை பெற http://www.freeav.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails