எல்லா வெப்சைட்டிலும் 'தினமலர்' செய்திகள்

எந்த இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அன்றைய செய்திகள் தாமாக ஓடிவரும் வசதியை, "தினமலர்' அறிமுகப்படுத்தி உள்ளது.


இன்டர்நெட்டில், "தினமலர்' தரும் செய்திகளைப் படிக்க, ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை மூடிவிட்டு, "தினமலர்' வெப்சைட்டுக்குச் சென்று பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.


எந்த வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருந்தாலும், "தினமலர்' செய்திகள், கண்களை உறுத்தாமல், அந்தத் திரையில் ஓடிக்கொண்டே இருக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டின், "டூல்பாரில்' "தினமலர்' செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்.


அவற்றில் ஏதேனும் ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தால், அந்த இடத்தில், "கிளிக்' செய்தால் போதும். "தினமலர்' தளம் திறக்கப்பட்டு, அந்தச் செய்தி காட்டப்படும்.இது மட்டுமல்ல; அன்றைய, "தினமலர்' செய்தித்தாளில் உள்ள அத்தனை அம்சங்களையும் அறிய, "செய்திகள், பிற பகுதிகள், மற்றவை' என மூன்று மெனுக்களுக்கான கட்டங்களும் பிரவுசரில் இருக்கும்.

இவற்றை கிளிக் செய்தால், அன்றைய செய்திகள் மற்றும் "தினமலர்' நாளிதழின் சிறப்பம்சங்களான டீக்கடை பெஞ்சு, டவுட் தனபாலு, கார்ட்டூன்ஸ், இது உங்கள் இடம், பக்கவாத்தியம் போன்றவற்றைப் பெறலாம்.இதோடு நிற்கவில்லை; இனி தகவல்களைத் தேட கூகுள் தளத்தை திறந்து பார்க்க வேண்டியதில்லை.

"டூல் பார்' வசதி பெறப்பட்ட பிறகு, ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் பிரவுசரிலேயே, "தினமலர்' தேடல் விண்டோ ஒன்று தரப்படும். கூகுள் வழி தேடலை இதிலிருந்தே மேற்கொள்ளலாம்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் என எல்லா பிரவுசரிலும் இந்த வசதி கிடைக்கும்.

தினமலர் டூல் பா‌ர் டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்

இரு வாரங்களுக்கு முன் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளுடன் ட்ரோஜன் வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதிப்பதாக, உறுதியான செய்திகள் கிடைத்தன.

Sothink Web Video Downloader என்னும் தொகுப்பின் பதிப்பு 4 மற்றும் Master Filer என்னும் இரு தொகுப்புகளில் இந்த பிரச்னை இருந்ததாக மொஸில்லா குற்றம் சாட்டியிருந்தது. இவற்றுடன் வைரஸ் மறைந்து ஒட்டிக் கொண்டு வந்து தொல்லை கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் தொகுப்புடன்Win32.LdPinch.gen என்ற வைரஸும், இரண்டாவது தொகுப்புடன் Win32.Bifrose.32என்ற வைரஸும் பரவுவதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ற வார இறுதியில் வெளியான தகவல் அறிக்கையில் முதல் ஆட் ஆன் தொகுப்புடன் வைரஸ் இல்லை என்று சொல்லப்பட்டது.

இரண்டாவது ஆட் ஆன் தொகுப்பில் மட்டும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் இப்போது மொஸில்லாவினால் சரி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த வைரஸ் புரோகிராம் எப்படி ஆட் ஆன் தொகுப்புகளுடன் கலந்தன என்று விளக்கப்படவில்லை.

இது மொஸில்லாவுக்கு ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வுதான். ஆட் ஆன் தொகுப்புகள் பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பெருமையைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது மொஸில்லா இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகிறது

நோக்கியா வழி காட்டுகிறது

நீங்கள் நோக்கியாவின் மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இந்திய நகரங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல போனில் அதற்கான வழி இலவசமாகவே கிடைக்கும்.

உலகில் அதிக அளவில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கி, இந்தியாவில் 60 சதவீதம் மொபைல் போன் விற்பனைப் பங்கினைக் கொண்டிருக்கும் நோக்கியா, ஜனவரி 20 முதல் இந்த வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது.

84 நகரங்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. இந்த நகரங்களில் பல லட்சக்கணக்கான அடையாள இடங்கள் சுட்டிக் காட்டப்பட்டு வழி காட்டப்படுகின்றன. அதுவும் முப்பரிமாணமாகக் கிடைக்கிறது. வண்டிகளை ஓட்டுபவர்களுக்குச் சாலைகளும், குறுக்குச் சந்துகளும் காட்டப்படுகின்றன.

நடந்து செல்பவர்களுக்கு சுருக்கு வழிகள் காட்டப்படுகின்றன. உலக அளவில் 74 நாடுகளில் 46 மொழிகளில் இந்த வழி நடத்தும் சேவை காட்டப்படுகிறது.

மோட்டாரோலாவின் சில மொபைல் போன்களில், கூகுள் இவ்வாறு வழிகாட்டும் சேவையை வழங்கத் தொடங்கியதை முன்னிட்டு, அதற்குப் போட்டியாக வெகு நாள் திட்டமிட்டு, நோக்கியா இந்த சேவையினை வழங்கத் தொடங்கியுள்ளது.

மேலும் ஸ்மார்ட் போன் விற்பனையைப் பொறுத்த வரை, நோக்கியாவைக் காட்டிலும் ஆர்.ஐ.எம். மற்றும் ஆப்பிள் போன்கள் முதல் இடங்களில் உள்ளன. இதனால் நோக்கியா தன் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியைத் தந்து போன் விற்பனையை உயர்த்த திட்டமிடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜி.பி.எஸ். இணைப்புடன் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தும் ஒருவர், போனில் இன்டர்நெட் இணைப்பு பெற்று கூகுள் மேப் மூலம் வழிகாட்டும் வசதியை இலவசமாகப் பெறலாம்.

ஆனால், கூகுள் தரும் வசதி, நோக்கியா மேப்ஸ் போல ஒவ்வொரு திருப்பத்தையும் காட்டுவதில்லை. மேலும் நோக்கியாவின் மேப் வசதியை போனில் டவுண்லோட் செய்து வைத்துக் கொண்டு, இன்டர்நெட் இணைப்பு பெறாமலும், நெட்வொர்க் கிடைக்காத இடத்திலும் பயன்படுத்தலாம்.

இந்த வசதியுடன் பன்னாட்டளவில் இந்த வகை வழிகாட்டும் அமைப்பான லோன்லி பிளானட் என்னும் தள வசதியும் ஸ்மார்ட் போனில் தரப்படுகிறது. இந்த தள வசதி இந்தியாவில் கிடைக்கிறது. இதில் 84 நகரங்களுக்கு வழிகாட்டல் உள்ளது.

உணவு விடுதிகளுக்கான டிஜிட்டல் வழிகாட்டல், சீதோஷ்ணநிலை அப்டேட் ஆகியவையும் தரப்படுகின்றன. வருங்காலத்தில் இந்த வசதி தரப்படும் போது விளம்பரங்களும் இணைக்கப் படும் என நோக்கியா தலைமை அதிகாரி தனேஜா தெரிவித்தார்

நோக்கியாவின் மலிவான 3ஜி போன்

நோக்கியா தன் 2730 என்ற மாடலைத் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை இதனை ஒரு 3ஜி போனாகக் கொண்டு வந்துள்ளது.

ரூ.4,499 விலையிடப்பட்டுள்ள இந்த போன்தான், 3ஜி மொபைல்களில் மிக மலிவான போன் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த போனில் உள்ள முக்கிய அம்சங்கள்:

நோக்கியா லைப் டூல்ஸ், ஓவிஐ மெயில், 2 எம்பி கேமரா, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், 1000 முகவரிக்கான அட்ரஸ் புக், அதிக நேரம் பேசும் திறன் தரும் பேட்டரி,எம்.எம்.எஸ்., இமெயில், பிளாஷ் மெசேஜ், ஆடியோ மெசேஜ், எக்ஸ்பென்ஸ் மேனேஜர், கால்குலேட்டர், ஹேண்ட்ஸ் பிரீ ஸ்பீக்கர் ஆகிய வசதிகள் உள்ளன.

இதில் ஆப்பரா மினி தரப்படுகிறது. பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 16.5 நாட்களுக்கு மின்சக்தி இருக்கும்

First-flight testing of GSLV MK-III in April: ISRO chief

The first flight testing of GSLV MK-III rocket, which will put heavier satellites in space, is likely to be carried out in April, the ISRO on Wednesday said.

ISRO Chairman K Radhakrishnan said scientists are working hard in developing the satellite and expressed hope that its first flight testing would take place in April.

Addressing nearly 650 delegates at the 16th National Space Science Symposium (NSSS) hosted by the Saurashtra University here, Radhakrishnan said human presence in solar system is the next logical step in space research, which is a very challenging job because of high expectations.

On January 24, ISRO had successfully conducted the static testing of GSLV Mk III's Solid Propellant Booster Rocket Stage, S200, at the Satish Dhawan Space Centre in Sriharikota. The testing of the liquid stage is expected later this month.

He said it is ISRO's dream to send human beings to the moon. "We are pursuing this dream."

மயங்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்

விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.

பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும்.

முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது.

எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.

எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும்.

சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும்.

அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம்.

அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும்.

அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Taskஎன்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும்.

இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்

கூகுளின் புதிய அவதாரம் - Buzz

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன.

ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர்.

இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது.

Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால்,http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள்.

அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும்.

இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம்.

இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம்.

குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்

இரட்டை கோபுர வீழ்ச்சி திகில் படங்கள் வெளியீடு

அமெரிக்காவின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது, ஹெலிகாப்டரிலிருந்து அந்நாட்டு போலீசார் எடுத்த அதிர்ச்சியூட்டும் படங்கள், சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன.


அமெரிக்காவில், உலக வர்த்தக மையம் என்று அறியப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் 2001, செப்., 11 அன்று, பயங்கரவாதிகளால் விமான மோதல் மூலம் இடித்துத் தகர்க்கப்பட்டன. இக்கொடூர சம்பவத்தில், இரண்டாயிரத்து 752 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்;


நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.இச்சம்பவம் நிகழந்த போது, அமெரிக்க போலீசார் ஹெலிகாப்டரிலிருந்து பல படங்கள் எடுத்தனர்.


அப்படி எடுக்கப்பட்ட இரண்டாயிரத்து 779 படங்களுள் குறிப்பிட்ட படங்களை, அமெரிக்க செய்தி அமைப்புக்கு, அந்நாட்டு தேசிய தர மற்றும் தொழில்நுட்ப அமைப்பு வழங்கி யுள்ளது.


ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு படம் எடுத்த வெளிப்புற செய்தியாளர் களிடமிருந்து இந்தப் படங்களை தொழில்நுட்ப அமைப்பு வாங்கியிருந்தது.


ஒரு படத்தில் கட்டடம் இடிந்ததால் ஏற்பட்ட புழுதி அலையலையாக மிதந்து வருவது காட்டப் பட்டிருக்கிறது கட்டடம் படிப்படியாக இடிந்து அருகிலுள்ள பகுதிகளிலும், கிழக்கு நதியிலும் விழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்டடத்துக்குள் சிக்கியவர்களின் பரிதாபகரமாக வேதனையுடன் இருக்கும் முகங்களையும் எடுத்துக் காட்டுகின்றன

பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.


இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.


இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).

ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும்.

இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன;

பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது.

இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.

வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும்.

அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று.

எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

இன்டெக்ஸ் ஐ. என்.4495

இரண்டு சிம் போன்களுக்குப் பெயர் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான இன்டெக்ஸ், அண்மையில் ஐ.என்.4495 என்ற டூயல் சிம் மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அழகான வடிவமைப்பு, பயன்படுத்து வோரை எளிமையாக வழி நடத்தும் யூசர் இன்டர்பேஸ், ஈக்குவலைசர்களுடன் நல்ல ஒலி தரும் மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, நல்ல பேட்டரி எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இது சந்தைக்கு வந்துள்ளது.

இன்டெக்ஸ் போன்களில் பார்ப்பதற்கு அழகான போனாக இது அமைந்துள்ளது. கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. 2.4 அங்குல அகலத் திரை240 x 320 ரெசல்யூசனில் காட்சிகளைக் காட்டுகிறது.

திரை தொடு உணர் திரையாகவும் உள்ளது. எம்.பி.4 மற்றும் 3ஜிபி பார்மட் வீடியோக்களை இதில் இயக்கலாம். இதன் மெமரியை 8 ஜிபி வரை நீட்டிக்கலாம்.

வாப் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். மூலம் நெட் இணைப்பு கிடைக்கிறது. கடிகாரம், கால்குலேட்டர் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.

இதில் தரப்பட்டுள்ள பேட்டரி, எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதலான நேரம் இயங்குகிறது. இதன் குறியீட்டு விலை ரூ.4,200
Related Posts with Thumbnails