மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு

மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6 பதிப்பிற்கான, இறுதிச் சோதனைத் தொகுப்பினை அண்மையில் எந்த விளம்பர ஆரவாரமின்றி வெளியிட்டுள்ளது. இது இரண்டாவது ரிலீஸ் கேண்டிடேட் தொகுப்பாகும்.

(புதிய அப்ளிகேஷன் தொகுப்பு வெளியிடும் முன் இறுதியாக வெளியிடப்படும் சோதனைத் தொகுப்பினை ரிலீஸ் கேண்டிடேட் (Release Candidate) எனப் பெயரிட்டு வெளியிடுவது வழக்கம்) இந்த சோதனைத் தொகுப்பு விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்கள் அனைத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் எந்த குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த இரண்டாவது தொகுப்பினை மிகவும் பாதுகாப்பானது மற்றும் ஸ்திரமானது என்று மொஸில்லா கூறியுள்ளது. இதனைhttp://www.mozilla.com/firefox/allrc.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயர்பாக்ஸ் 3.6 பதிப்பின் சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்தி அதன் நிறை குறைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசரை மொத்தத்தில் 30 கோடிக்கும் மேலானவர்கள் தங்கள் பிரவுசராகப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சோதனைத் தொகுப்பில் கூடுதலாக "பெர்சனாஸ்' தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் விருப்பத்திற்கே படங்களை அமைத்து இதன் தோற்றத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பினைப் பொறுத்தவரை, நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ முயற்சிக்கும் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் இதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பயர்பாக்ஸ் பிரவுசரை கிராஷ் செய்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன.

பயர்பாக்ஸ் இயங்கத் தொடங்க வெகு நேரம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பலவாறாக இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கமும் துரிதப்படுத்தப்பட்டு ட்யூன் செய்யப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails