நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்தி

இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது. நான் மகான் அல்ல படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கி‌ உள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படம் பற்றி கூறிய கார்த்தி, நான் மகான் அல்ல படம் உண்மை ‌சம்பவத்தை மையமாக கொண்டது;

இது டைரக்டர் சுசீந்திரனின் உறவினர் ஒருவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது; சென்னையின் மாறுபட்ட பக்கத்தை பெரிய திரையில் காட்டக் கூடியதாக இப்படம் அமைந்துள்ளது;

தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத புதிய முயற்சி என்றே இப்படத்தை சொல்லலாம்; அதனாலேயே இப்படத்தின் ரிலீசை மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கார்த்தி தெரிவித்தார்.

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம்.

அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயக‌னை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்‌போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம்.

அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் ‌படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்

காதல் ஜோடியா? களவாணி ஜோடி!

சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் களவாணி ஜோடியின் காதல்தான் கலகலத்து பளபளத்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் களவாணி படத்தில் இணைந்து நடித்த காதல் ஜோடி விமலும், ஓவியாவும் நிஜத்திலும் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் கோலிவுட்டில்.

இவர்களது நெருக்கம் வெறும் நட்பினால் விளைந்த நெருக்கம் அல்ல; காதலால் கிளர்ந்த நெருக்கம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

இதற்கிடையில் மீண்டும் இருவரையும் ஜோடி சேர்த்து கல்லா கட்ட நினைக்கிறது கோடம்பாக்கத்தின் பல தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பு! அடடே... காதலை காசாக்குவது என்பது இதுதானோ?

பட்டாபட்டி 50 - 50 திரைப்பட முன்னோட்டம்

ஏ.வி.ஆர். டாக்கீஸ் மற்றும் பிலிக்கர் ஸ்டூடியோஸ் சார்பில் வி.முரளிராமன், யுவ்ராஜ், ஏ.எல்.அருன்குமார் ஆகியோர் தயாரிக்கும் படம் பட்டாபட்டி 50 - 50.

மதுரையில் நடைபெறும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை. நாயகனாக சடகோபன் ரமேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹரிணி அறிமுகமாகிறார். இது, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால், கிரிக்கெட் ஆட தெரிந்தவர்களை தேர்வு செய்கிறார்கள்.

படத்தின் இணை இயக்குனர்கள் சிவம், கணேஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கோபி அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே இந்தி-தெலுங்கு ஆகிய பிற மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார், அருள்தேவ். இவர், பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் பல படங்களில் பணிபுரிந்தவர். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், யுவ்ராஜ். இவர், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யுனிகேஷன் படித்தவர்.

பார்வையற்ற நடனப் பெண்ணாக மாறிய தீபிகா படுகோன்

யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பில் பிரதீப் சர்கார் இயக்கியிருக்கும் படம் லஃபங்கே பரிந்தே.இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், தீபிகா படுகோன் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 20ம் தேதி படம் வெளியாகிறது. படத்தில் தீபிகாவுக்கு பார்வையற்ற நடனப் பெண் வேடம். இந்த படம் தனது கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறுகிறார் தீபிகா.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்த படங்களிலேயே இந்த கேரக்டர்தான் எனக்கு மிக சவாலாக இருந்தது. பார்வையற்றவராக நடிப்பதே கஷ்டம் எனும் போது பார்வையற்ற நடனக்கலைஞராக நடிப்பது அதை விட சிரமம்.

பார்வையற்றவர்களுடன் நேரில் பழகி அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து இந்த படத்தில் நடிக்க தயாரானேன். நிஜ வாழ்வில் பிங்கி பால்கர் என்ற பெண்ணும் பார்வையற்ற நடனக் கலைஞர்தான்.

அவர் ரோலர் ஸ்கேட்சை காலில் அணிந்து கொண்டு நடனமாடுபவர். அவரது அனுபவமும் இந்த வேடத்தில் நடிக்க எனக்கு உறுதுணையாக இருந்தது என்றார்.

ஸ்பைஸ் எம் 7070

இரண்டு சிம்கள் கொண்ட போன் களை வடிவமைத்து வழங்குவதில் சிறப்பு பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் எம் 7070 மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அருமையான கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்ற போன்களுடன் போட்டியிடும் சிறப்பு அம்சங்கள், 5 எம்பி கேமரா, இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு,இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

240 து 320 பிக்ஸெல் கொண்ட அகல வண்ணத்திரை, டெக்ஸ்ட் அமைக்க உதவிடும் வகையில் அமைந்த கீ பேட், எளிதான யூசர் இன்டர்பேஸ், எம்பி3 பிளேயர், அம்சமான ஸ்பீக்கர், ஒலிகளைப் பெற்று ரெகார்ட் செய்திட உள்ளிணைந்த மைக், நேரத்தைத் திட்டமிட்டு ரெகார்ட் செய்திட வழி தரும் எப்.எம். ரேடியோ, எம்பெக் 4 மற்றும் 3ஜிபி பார்மட் வீடியோக்களை இயக்கும் வசதி, டிவி அவுட்புட், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ், மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம், அ2ஈக இணைந்த புளுடூத், ஆப்பரா மொபைல் பிரவுசர், கOக மற்றும் ஐMஅக இமெயில் அக்கவுண்ட் களுக்கான சப்போர்ட், சோஷியல் நெட்வொர்க்குகளுக்கான உடனடி இணைப்பு, 5 எம்பி திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. பிளாஷ், போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர், வீடியோ ரெகார்டிங் என அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன.

இந்த போனுடன் வரும் 800ட்அட பேட்டரி இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பேசும் சக்தியை வழங்குகிறது. இதன் மார்க்கட் விலை ரூ. 7,250.

ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருடிய நடிகை

பிரகாசமான வில்லன் நடிகரின் மாஜி மனைவி சமீபத்தில் மலேசியா சென்றிருந்ததாகவும், அங்குள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்றபோது சில பொருட்களை திருடி மாட்டிக் கொண்டதாகவும் பரபரப்பு செய்தியொன்று கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிரகாசமான வில்லன் நடிகரும், மாஜி நடிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். மனைவியை விவாகரத்து செய்த பிரகாச நடிகர், பிரபல பாலிவுட் நடன இயக்குனரை லவ்விக் கொண்டிருக்கிறார். விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்தில் பிரகாசத்தின் முன்னாள் மனைவி மலேசியா சென்றிருக்கிறார். அவர் அங்குள்ள ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்சில் பர்சேஸ் செய்து கொண்டிருந்தபோது, சில பில் போடாத பொருட்களும் எப்படியோ அவரது பேக்கில் வந்து சேர்ந்து கொள்ள, கையும் களவுமாக பிடித்து வைத்துக் கொண்டது நிர்வாகம்.

மாஜி நடிகைக்கு திருட்டு பட்டம் கட்டியதுடன், விஷயம் போலீஸ் வரைக்கும் போக, செய்வதறியாமல் திகைத்த அவர் உடனடியாக பிரகாச நடிகரை தொடர்பு கொண்டிருக்கிறார். எதிர்முனையில் இருந்து வந்த கதறல் குரலை எந்தவித ரீயாக்ஷனும் இல்லாமல் கேட்டுக் கொண்ட பிரகாசம், அப்படியே போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.

பிறகு எப்படியோ தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் சிலருக்கு தகவல் வந்து அவர்கள் மாஜி நடிகையை காப்பாற்றியிருக்கிறார்கள்

சூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஷெபில்டு பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர் பால் க்ரவுத்தர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘தரந்துலா நெபுலா’ என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இந்தப் புதிய நட்சத்திரம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

புழுதிப் புயல் போன்று புகை மண்டலமாக உள்ள மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்த நட்சத்திரம் மிகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. ‘ஆர்136 ஏஎல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகவும் பெரியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

ஆனால் தற்போது உள்ள எடையை விட இது 2 மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் அதிக உஷ்ணத்தால் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் குணம் உள்ள இத்தகைய நட்சத்திரங்கள் காலப்போக்கில் சுருங்கி சிறியதாகி முற்றிலும் அழிந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் ஆயுட்காலமும் மிகக் குறைவே என்கின்றனர்.


நாம் பூமியில் இருந்து பார்க்கும் சூரியனை விட பன்மடங்கு அதிகப் பிரகாசமாக காணப்படும் இந்தப் புதிய நட்சத்திரம் அதன் உயர் வெப்பம் காரணமாக தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் என்பதும் பூமியின் வெப்பத்தைப் போல் 7 மடங்கு அதிக வெப்பம் அதனைச் சுற்றி இருக்கும் என்பதும் ஆராய்ச்சித் தகவல்கள்.

இதன் ஆயுட்காலம் அதிக அளவாக (3 மில்லியன்) 30 லட்சம் ஆண்டுகள். இத்தகைய நட்சத்திரங்கள் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டது என்பதாலும் மிக அதிக தொலைவில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்து இருக்கும் என்பதாலும் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்கின்றனர்

விஞ்ஞானிகள். குறுகிய ஆயுளைக் கொண்டுள்ள இவை குறித்த தொடர் ஆராய்ச்சி என்பது இயலாத ஒன்று என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆதங்கம். பொதுவாக மிகக் குறைந்த எடையுடன் பிறந்து பின்னர் எடை கூடுவது மனித பிறப்பு. இதற்கு மாற்றாக நட்சத்திரங்கள் உருவாகும் போது மிக அதிக எடை மற்றும் உருவத்துடன் தோன்றி, பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.

புதிய நட்சத்திரம் ஆர்136 ஏஎல் அளவில் நமது பூமியை விட 10 மடங்கு பெரியது. மிகவும் அரியதும் அளவில் பெரியதும் அதிக ஒளி வீசுவதுமான புதிய வரவாக வந்துள்ள இத்தகைய நட்சத்திரங்கள் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் என்பதால் இவற்றின் ஆயுள் மிகவும் குறைந்த காலம் தான் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.

சூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஷெபில்டு பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர் பால் க்ரவுத்தர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘தரந்துலா நெபுலா’ என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இந்தப் புதிய நட்சத்திரம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

புழுதிப் புயல் போன்று புகை மண்டலமாக உள்ள மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்த நட்சத்திரம் மிகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. ‘ஆர்136 ஏஎல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகவும் பெரியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

ஆனால் தற்போது உள்ள எடையை விட இது 2 மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் அதிக உஷ்ணத்தால் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் குணம் உள்ள இத்தகைய நட்சத்திரங்கள் காலப்போக்கில் சுருங்கி சிறியதாகி முற்றிலும் அழிந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் ஆயுட்காலமும் மிகக் குறைவே என்கின்றனர்.


நாம் பூமியில் இருந்து பார்க்கும் சூரியனை விட பன்மடங்கு அதிகப் பிரகாசமாக காணப்படும் இந்தப் புதிய நட்சத்திரம் அதன் உயர் வெப்பம் காரணமாக தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் என்பதும் பூமியின் வெப்பத்தைப் போல் 7 மடங்கு அதிக வெப்பம் அதனைச் சுற்றி இருக்கும் என்பதும் ஆராய்ச்சித் தகவல்கள்.

இதன் ஆயுட்காலம் அதிக அளவாக (3 மில்லியன்) 30 லட்சம் ஆண்டுகள். இத்தகைய நட்சத்திரங்கள் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டது என்பதாலும் மிக அதிக தொலைவில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்து இருக்கும் என்பதாலும் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்கின்றனர்

விஞ்ஞானிகள். குறுகிய ஆயுளைக் கொண்டுள்ள இவை குறித்த தொடர் ஆராய்ச்சி என்பது இயலாத ஒன்று என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆதங்கம். பொதுவாக மிகக் குறைந்த எடையுடன் பிறந்து பின்னர் எடை கூடுவது மனித பிறப்பு. இதற்கு மாற்றாக நட்சத்திரங்கள் உருவாகும் போது மிக அதிக எடை மற்றும் உருவத்துடன் தோன்றி, பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.

புதிய நட்சத்திரம் ஆர்136 ஏஎல் அளவில் நமது பூமியை விட 10 மடங்கு பெரியது. மிகவும் அரியதும் அளவில் பெரியதும் அதிக ஒளி வீசுவதுமான புதிய வரவாக வந்துள்ள இத்தகைய நட்சத்திரங்கள் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் என்பதால் இவற்றின் ஆயுள் மிகவும் குறைந்த காலம் தான் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.

நான் மகான் அல்ல - முன்னோட்டம்

வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம் 'நான் மகான் அல்ல'.​ இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.​

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.​ முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.​ ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களை நக்கல்,​​ நையாண்டி செய்து வாழும் ஓர் இளைஞனுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களே கதை.​

இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது நான் மகான் அல்ல.

வசனம் -​ பாஸ்கர் சக்தி.​ இசை -​ யுவன்ஷங்கர்ராஜா.​ பாடல்கள் -​ நா.முத்துக்குமார்,​​ யுகபாரதி,​​ பிரான்சிஸ்.​

ஒளிப்பதிவு -​ மதி.​ கலை -​ ராஜீவன்.​ தயாரிப்பு -​ கே.ஈ.ஞானவேல். கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி ‌படத்தை வெளியிடுகிறார்.

பேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்

பேஸ்புக் தளத்தில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டப் போகிறது. இது உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும்.

இது குறித்து இதனை நிறுவிய மார்க் ஸுக்கர்பெர்க் கூறுகையில், எண்ணிக்கை 100 கோடியை எட்டும் நாளும் விரைவிலேயே வரும் என்றார். பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து, அதிகம் பயன்படுத்துவோர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருக்கின்றனர்.

வியட்நாம் மற்றும் சீனாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதன் வளர்ச்சிக்கு பெரும் தடை உள்ளது. இந்தியாவில், இந்த தளம் பள்ளிகளின் பட்டியல் ஒன்றைத் தேடி அறிய உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் இதில் பதிவு செய்து நண்பர்களைத் தேடி அறிய முடிகிறது. இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும், இந்த தளத்திற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் அமைந்துள்ளது.

ஜப்பானைப் பொறுத்தவரை, அங்கு மொபைல் வழி இன்டர்நெட் பிரவுசிங் அதிகம் என்பதால், பேஸ்புக் அதற்கான தளத்தினை அமைத்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது

அஜித்தின் மங்காத்தாவுக்கு சிக்கல்

அஜித்தின் அடுத்த படத்தற்கு மங்காத்தா என தலைப்பிட்டிருந்தார் அப்படத்தை இயக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்போது அந்த தலைப்புக்கு சிக்கல் வந்திருக்கிறது.

தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜித் ஜோடியாக நீது சந்திரா நடிக்கவிருக்கிறார். தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித், சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் மங்காத்தா என்ற தலைப்புக்கு சிக்கல் வந்துள்ளது. ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையையும் தயாராக வைத்திருக்கும் அவர், எக்காரணம் கொண்டும் மங்காத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டேன், என்று விடாப்பிடியாக கூறி விட்டாராம். வெங்கட்பிரபு, அஜித் என முக்கிய புள்ளிகள் பேசியும் மசியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மங்காத்தா தலைப்பு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மற்றும் நாயகன் அஜித்திடம் ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

ஏற்கனவே மணிரத்னம் தனது படத்திற்கு ராவணன் என பெயர் சூட்டிய பின்னர் வேறொருவர் அந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்து, அவரிடம் பெரும் தொகை கொடுத்து தலைப்பை வாங்கியது ஞாபகம் இருக்கலாம். தற்போது சூட்டிங்கில் இருக்கும் விஜய்யின் காவல் காதல் படத்திற்கு கூட முதலில் காவல்காரன் என பெயரிட்டு விட்டு, கடைசியில் காவல் காதல் என மாற்றும்படியானது.

இப்போது அஜித் படத்திற்கும் அதே சிக்கல் வந்திருக்கிறது. தலைப்பை வைக்கும் முன்... அந்த தலைப்பு ஏற்கனவே யாரிடம் இருக்கிறது என விசாரிக்காமல் வைத்தால் இப்படித்தான் வீண் குழப்பமும், பண விரயமும் ஏற்படும் என்கிறார் விவரமறிந்த கோடம்பாக்கத்துக்காரர் ஒருவர்.

"எந்திரன்" அடுத்த மாதம் வெளியீடு

"எந்திரன்' எந்த நிலைமையில் இருக்கிறது? இப்போதெல்லாம் திரையுலகில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் கேள்வி இதுதான். அவ்ளோ எதிர்பார்ப்பு...

இருக்காதா பின்னே? ராவணனுக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடனும் பொருள் செலவுடனும் தயாரிக்கப்படும் படம் இதுதானே?

முன்பு பொங்கல் ரிலீஸ், தீபாவளி ரிலீஸ் என்றெல்லாம் பேசப்பட்ட "எந்திரன்' ஆகஸ்ட் மாதமே கூட ரிலீசானால் ஆச்சரியப்பட வேண்டாம். 7ஆம் தேதியுடன் கடைசிக் கட்டம் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைத்து விட்டார்களாம்.

எடிட்டிங் முடிந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் தி ஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவில் பின்னணி இசை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் ஜூலை மாதக் கடைசியில் இசைத்தட்டு வெளியீடு தடபுடலாகக் கோலாலம்பூரில் நடைபெறும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரிய படங்கள் எதுவும் வெளிவரும் வாய்ப்பில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இனி ஜனவரி மாதத்தில்தான். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட்டால், குறைந்தது 50 நாட்களுக்காவது படம் ஓடுவது உறுதி என்பதால் வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தகவல்.

சௌந்தர்யாவின் திருமணத்திற்கு முன் "எந்திரன்' வெளியிடப்பட்டு விடுமோ என்னவோ. "எந்திரன்' கலை சம்பந்தப்பட்ட ஒன்றோ இல்லையோ, நிச்சயம் நிதி சம்பந்தபட்ட விஷயம். அதனால் இனியும் காலம் தாழ்த்த மாட்டார்கள் என்று நம்பலாம்!

5 மாடல்களை அறிமுகம் செய்கிறது மோட்டரோலா

இந்தியாவில் மொபைல் போன் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மொட்டரோலா, மோட்டோயுவா வகையில் 5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இது போன்ற முயற்சியில் இறங்கி உள்ளதாக மோட்டரோலா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேசுவது, செய்தி அனுப்புவது, போட்டோ எடுப்பது மற்றும் பாடல்கள் எடுப்பது உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த 5 மாடல்களும் அறிமுகப்படுத்தப்பபட்டுள்ளது.

இவற்றில் எஃப்.எம்., ப்ளூடூத், டார்ச் லைட், எம்பி3 பிளேயர், கேமரா உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் ஆரம்ப விலை ரூ.1490 லிருந்து ரூ.2890 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ரீமேக் ஆகிறது 3 இடியட்ஸ்

இந்தியில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் வசூலிலும் மெகாஹிட்டானது.

இப்படத்தில் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் கதை விவாதத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார் ஷங்கர்.

இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில், தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார். தமிழில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்ற குழப்பம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விஜய், அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் வதந்தி பரவி உள்ளது.இந்த குழப்பத்திற்கான தீர்வை ஷங்கர் விரைவில் வெளியிடுவார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் 50வது படம் மங்காத்தா

நடிகர் அஜித்தின் 50வது படத்திற்கு மங்காத்தா என்று பெயர் சூட்டியுள்ளார் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார்.

அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அங்கிருந்து திரும்பியதும் மங்காத்தா படத்தில் நடிப்பார் என தெரிகிறது. அ‌நேகமாக ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்துடன் ‌ஜோடி சேரப்போகும் நீது சந்திரா அளித்துள்ள பேட்டியில், வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவுசெய் திருப்பதாக கூறினர்.

நான் ரொம்ப மகிழ்ச்சியானேன். உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகியாக்கி இருப்பது பற்றி சொன்னார். வெங்கட்பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்.

அவர் இயக்கிய செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி, என்று கூறியுள்ளார். மங்காத்தா படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விருதகிரியில் விஜயகாந்தின் அரசியல் பஞ்ச்


நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் விருதகிரி. இந்த படத்தின் நாயகனும் அவர்தான்.

கட்சிப்பணி, இயக்குனர் பணி, நடிப்புப் பணி என தினம் தினம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர், விருதகிரியில் தனது ரசிகர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு பிடிக்கும் வகையிலான பஞ்ச் வசனங்களை வைத்திருக்கிறார்.

'அணியா நின்னு ஆளுறதை விட, தனியா நின்னு வாழுறதுதாண்டா பெருமை!' என்பது உள்ளிட்ட எக்கச்சக்க பஞ்சகளை படத்தில் வைத்திருக்கும் விஜயகாந்த், பொது மக்கள், மாணவர்கள், திருநங்கைகள் என இவர்களுக்குள் பலதரப்பட்ட பிரச்னைகளை கையில் எடுத்திருக்கிறாராம்.

மொத்தத்தில் இது மக்களுக்கான படம் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

நடிகர் சங்கத்துக்கு அசினின் கேள்வி

தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக இருந்த அசின், கஜினி படத்தின் இந்திப்பதிப்பில் நடிப்பதற்காக பாலிவுட் பக்கம் போனார். அந்த படம் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடியாதால் அசினின் மார்க்கெட் உயர்ந்தது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது ரெடி என்ற இந்திப்படத்தில் நடித்து வரும் அசின், அப்படத்தின் சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கைக்கு சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் ரெடி படக்குழுவினரின் கட்டுப்பாட்டை மீற முடியாத அசின் திட்டமிட்டபடி இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதோடு நில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மனைவியுன் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இலங்கை தமிழர்களை சந்தித்தார். இதனால் அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இ‌ந்நிலையில் அசின் தனது நிலையை ‌பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியில், நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை.

தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம். இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன். ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன்.

அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன்.

ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா - அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன்.

இது தவறா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள்,

`அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?'' என்று கண்கலங்கி கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

விஜய் பட தலைப்புக்கு தடை

நடிகர் விஜய்யின் புதுப்பட தலைப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. மலையாளத்தில் நயன்தாரா - திலீப் நடித்து சித்திக் இயக்கிய பாடிகார்ட் படத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் சித்திக்.

அசின் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு காவல்காரன் என்று ‌பெயரிடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்து சத்யா மூவிஸ் தயாரித்து 1967ம் ஆண்டு வெளிவந்த காவல்காரன் படத்தின் தலைப்பை விஜய் படத்துக்கு வைக்கக்கூடாது என்று சத்யா மூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சத்யா மூவிஸ் நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், `விஜய் இப்போது நடித்து வரும் புதிய படத்துக்கு `காவல்காரன்' என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பின் உரிமையை யாருக்கும் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே அந்த படத்துக்கு காவல்காரன் என்று பெயர்வைப்பதற்கு அனுமதிக்க கூடாது'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

இதை தொடர்ந்து தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. பழைய பட தலைப்பை வைக்கும்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெறுவதுடன், மறுப்பு இல்லாத சான்றிதழும் வாங்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் அந்த தலைப்பை வைக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதி இருக்கிறது.

எனவே உங்கள் படத்துக்கு வேறு தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து விஜய் படத்தின் பெயர் `காவல் காதல்' என்று மாற்றப்பட்டு இருக்கிறது.

தமிழ்சினிமாவில் தலைவிரித்தாடும் தட்டுப்பாடு!

தமிழ் சினிமாவில் இரு பிரிவினர் இருக்கிறனர். முதல் பிரிவினர், சினிமாவை அக்கு வேரு ஆணி வேராகக் கரைத்துக் குடித்தவர்கள். மற்றொரு பிரிவினர், ஆனா... ஆவன்னா... கூட தெரியாதவர்கள்.

சமீபத்தில் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இந்த இரண்டாம் பிரிவினரே மூலகாரணமாக இருக்கின்றனர். இரண்டாம் பிரிவினரில் பெரும்பாலோனோர் தயாரிப்பாளர்கள், என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆணியைக் கண்ணால் அறைவதைப் போல பேராபத்தான இந்தத் தயாரிப்புத் துறையில் முதலீடு செய்த பலர், வந்த வழி பார்த்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேறு கதை. இதைப் பார்த்த முதல் பிரிவினர், தமிழ் சினிமாவுக்கு தங்களது பங்களிப்பாக வாரிசுகளை நட்சத்திரங்களாக உருவாக்கி வருகின்றனர். பிரபலங்களின் மகனாப் பிறந்தால் போதும், எளிதில் நடிகராகிவிடலாம் என்ற நிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

"தலைவாசல், அமராவதி, கர்ணா, பூவேலி, ஜேம்ஸ் பாண்டு, உன்னருகே நானிருந்தால், ஸ்டூடன்ட் நம்பர் 1, நான் அவன் இல்லை' போன்ற படங்களை இயக்கிய செல்வா, "நாங்க' என்ற படத்தை இயக்குகிறார். செல்வாவின் 25வது படமான இதில், 13 புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார். இதில், ஒன்பது பேர் சினிமா பின்புலம் கொண்டவர்கள். பழைய நடிகர் தயாளனின் மகன் நிவாஸ், தயாரிப்பு நிர்வாகி குருசாமியின் வினோத், சசியின் மகன் அருண், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரின் மகன் விவேக், தெலுங்கு இசையமைப்பாளர் வாசுராவின் மகன் முனீஷ், தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின், நடிகர் பெரிய கருப்புத் தேவரின் மகன் விருமாண்டி, நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய், பாடகர் மனோவின் மகன் சாஹிர் ஆகியோர் தான் பிரபலங்களின் வாரிசுகள்.

அது என்னவோ தெரியவில்லை, சினிமாப் பிரபலங்களின் மகள்களுக்கு மட்டும் ஹீரோயினியாகும் ஆசை துளிர்ப்பதே இல்லை. இந்தச் சாபக்கேட்டால் தான், தமிழ் சினிமாவின் கிராமியப் படங்களுக்கான முகத்தை, மும்பை மாடலிடம் தேட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் இந்த ஆட்கள் தட்டுப்பாடு, "நாங்க' படத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தப் படத்துக்குத் தேவைப்படும் நான்கு ஹீரோயின்களில் மூவர், அண்டை மாநிலத்தில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளனர். விஷ்ணுப்ரியா, ஷிவானி இருவரும் கேரளாவில் இருந்தும், வைதேகி பெங்களூருவில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர்

கமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா!

உலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்.

நடிகைகளின் அம்மாக்களில் அழகானவர் யார்? என ஒரு ‌போட்டி வைத்தாலும், கேள்வி கேட்டாலும் முதலிடத்தில் இருப்பவர் த்ரிஷாவின் அம்மா உமாவாகத்தான் இருப்பார்.

த்ரிஷாவைப் போலவே இன்னமும் இளமையான தோற்றத்துடன் மாடர்ன் மங்கையாக வலம் வந்து கொண்டிருக்கும் உமாவை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். நடிப்பெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று சட்டென பதில் சொல்லி கால்ஷீட் கேட்பவர்களை ஓ‌ட்டம் பிடிக்க வைத்து விடுவார்.

ஆனால் இப்போது கமல்ஹாசன் வீசிய வலையில் விழுந்து விட்டாராம் உமா. கமல்ஹாசன் - த்ரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில்தான் உமா நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

90 சதவீதம் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், த்ரிஷாவுக்கு பாதுகாப்பாக வரும் உமாவுக்காக ஒரு சிறிய கேரக்டரை உருவாக்கியிருக்கும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அந்த கேரக்டரில் கண்டிப்பாக நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். கமல்ஹாசனும் விரும்பி கேட்டுக் கொண்டதால் உமா சம்மதம் தெரிவித்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்

வெளுத்துகட்டு - விமர்சனம்


ஒரே கிராமத்தில் வசிக்கும் கதிரும் அருந்ததியும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். கதிர் படிப்பு ஏறாமல் இடையில் நிறுத்திவிட்டு அடிதடி என ஊதாரியாகிறார். காதலை அருந்ததி பெற்றோர் எதிர்க்கின்றனர். 

ஒரு வேளை கஞ்சி கூட ஊற்ற முடியாதவனையா மணக்கப்போகிறாய் என்று கண்டிக்கின்றனர். ஆவேசமாகும் அருந்ததியோ, கதிரிடம் வெளியூர் போய் நிறைய பணம் சம்பாதித்து என் குடும்பத்துக்கு தகுதியான மருமகனாக வந்து என்னை கட்டிக்கொள் என்கிறார்.

 
காதலி சொல்படி கதிர் பட்டிணம் வருகிறார். கடினமாக உழைத்து ஓட்டல் கட்டி நிறைய சம்பாதிக்கிறார், பிறகு பணப்பெட்டியுடன் அருந்ததியை பார்க்க கிராமத்துக்கு வருகிறார். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்...

 
தறுதலை இளைஞன் ஒரு பெண்ணின் காதலால் எவ்வாறு உயர்கிறான் என்பதை கிராமிய மணத்தோடு யதார்த்தமாக காட்சி படுத்தியுள்ளார். இயக்குனர் சேனாபதி மகன். வம்பு சண்டைக்கு மல்லுக்கட்டியும் காதலில் உருகுபவராகவும் நிறைவாய் வருகிறார் கதிர். 

காதலி கட்டளைப்படி கிராமத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஊரார் வாழ்த்தை பெறுவது அழுத்த மான பதிவு. நகரத்தில் டிபன் வியாபாரம் செய்யும் வண்டியை போலீசார் நொறுக்கி போட்டதும் அழுது புலம்பி இதயத்தை கனக்க வைக்கிறார்.

 
புதுமுகம் அருந்ததி அழகான வரவு. எனக்காக எதுவும் செய்வியா என கேட்டு உயரமான பாறையில் இருந்து அருவியில் கதிரை குதிக்க சொல்ல, அவரும் குதிக்க அய்யோ என அலறியபடி அருவிப் பகுதிக்கு ஓடிவந்து தண்ணீரில் உயிரை பிடித்தபடி தேடி புலம்பி காதலில் உயிர் பாய்ச்சுகிறார்.

 
தன்னை பலாத்காரம் செய்த வில்லனிடம் இது கதிரோட உடம்புடா இதையா தொட்டே என்று வெறியாக மாறி அரிவாளுடன் விரட்டி அசுரத்தனம் காட்டுகிறார்.
 

வழக்கமான பாணியில் இருந்து விலகி காதல், லட்சியம் என்ற கருவில் விறுவிறுப்பான கதையம்சம் உள்ள படமாக தயாரித்து உள்ளார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன். வாழ்வை தொலைக்கும் இளைஞர்களுக்கு முன்னேற்றத்துக்கான பாடம் நடத்தி உள்ளார். நேர்த்தியான திரைக்கதை காட்சிகளோடு ஒன்ற செய்கிறது. பரணி இசையில் பாடல்கள் இனிமை, ஷோபா சந்திரசேகரனின் அசிலிபிசிலி வெளுத்துக்கட்டு பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவு பலம்.

 
சிறுவன் சிறுமியின் காதல், உரசல், விளையாட்டு திருமண வகையறாக்கள் ஒட்டவில்லை. அவற்றின் நீளத்துக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.

இயக்குனர் ராஜா, அர்ச்சனா சர்மா, பானு, முத்துராஜ், கேரக்டர்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன.

துவங்குகிறது தேர்தல் திருவிழா

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்குகிறது. இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சி காலம் நிறைவு பெறுகிறது. 

இதனையடுத்து வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் துவக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டசபை வரும் மே மாதம் 13 ம் தேதியுடன் காலவதியாகிறது. எனவே இதற்கு முன்னதாக தேர்தல் நடத்தியாக வேண்டும். இதனால் வரும் 2011 ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான பணிகள் குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நிருபர்களிடம் பேசினார். இவர் கூறியதாவது: வரும் 6 ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா சென்னை வருகிறார். இவர் தமிழக உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். 

இந்த கூட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுச்சாவடிகள் ஆய்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்; செப். 15 ம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பபட்டு விடும்.

சமீபத்தில் காலமான காங்., சட்டசபை தலைவர் சுதர்சனம் காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு அங்கு தேர்தல் நடத்தப்படாது என்றார். காரணம் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் இது தேவையில்லை என்றார்.

நவீன்சாவ்லா வருகையை அடுத்து தமிழகத்தில் தேர்தல் ஜூரம் துவங்கி விடும். அரசியல் காட்சிகள், அரசியல் நடை போக்குகளில் மாற்றம் காண முடியும்.
Related Posts with Thumbnails