சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்

டைரக்டர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தனது மகன் சிம்புவை வைத்து படம் இயக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். 

ஏன் சிம்புவை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கவும், அவர்களை வெற்றி கதாநாயகர்களாக மாற்றவுமே தான் விரும்புவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரை வைத்து நான் பல படங்கள் இயக்கி இருக்கிறேன்; 

ஆனால் இப்போது அவர் மிக உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டார்; இனி எதிர்காலத்திலும் சிம்புவை வைத்து படம் எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை; சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது; 

அதனைத் தொடர்ந்து பெரிய படங்கள் இரண்டில் நடிக்க சிம்புவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails