ப்ளாக்பெரிக்கு பிரீபெய்ட் வசதி

பிளாக்பெரி சேவையை இனி நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டாட்டா டெலி சர்வீசஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. மாத அளவில் மட்டுமின்றி, வார அளவில் கூட இவற்றை அமைத்துக் கொள்ளலாம். 

அதே போல மெசேஜ் அனுப்புவதற்கு என ஒரு திட்டமும், இன்டர்நெட் பார்ப்பதற்கு என ஒரு திட்டத்தினையும் மேற்கொள்ளலாம். இவற்றைப் பெற முறையே ரூ.299 மற்றும் ரூ.900 மாதக் கட்டணமாகவும், ரூ.85 மற்றும் ரூ.250 வாரக் கட்டணமாகவும் செலுத்தலாம். 

இந்த இரண்டு வகை சேவைகளும் இந்தியாவில் முதல் முறையாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இமெயில் திட்டத்தில் ஒருவர் பத்து அக்கவுண்ட்களை ஒரே நேரத்தில் கையாளலாம். பத்து மெயில் பெட்டிகளும் திரையில் ஒரே நேரத்தில் காட்டப்படும். அதே போல பல இன்ஸ்டண்ட் மெசேஜ்களையும் நிர்வகிக்கலாம். 

இன்டர்நெட் பிரவுசிங் செய்வதற்கு எந்த வரையறையும் இல்லை. டாட்ட டெலிசர்வீசஸ் பிளாக்பெரி போன்களை வழங்கி சேவைகளையும் தருகிறது. பிளாக்பெரி 8703இ – ரூ.9,990, கர்வ் டி.எம்.8330 – ரூ. 15,990, பிளாக்பெரி 8830 வேர்ல்ட் எடிஷன் – ரூ.17,000 மற்றும் பிளாக்பெரி டூர் 9630–ரூ.27,990 க்கும் கிடைக்கின்றன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails