நடிகர் சங்கத்துக்கு அசினின் கேள்வி

தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக இருந்த அசின், கஜினி படத்தின் இந்திப்பதிப்பில் நடிப்பதற்காக பாலிவுட் பக்கம் போனார். அந்த படம் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடியாதால் அசினின் மார்க்கெட் உயர்ந்தது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது ரெடி என்ற இந்திப்படத்தில் நடித்து வரும் அசின், அப்படத்தின் சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கைக்கு சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் ரெடி படக்குழுவினரின் கட்டுப்பாட்டை மீற முடியாத அசின் திட்டமிட்டபடி இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதோடு நில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மனைவியுன் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இலங்கை தமிழர்களை சந்தித்தார். இதனால் அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இ‌ந்நிலையில் அசின் தனது நிலையை ‌பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியில், நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை.

தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம். இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன். ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன்.

அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன்.

ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா - அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன்.

இது தவறா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள்,

`அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?'' என்று கண்கலங்கி கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails