விஜய் பட தலைப்புக்கு தடை

நடிகர் விஜய்யின் புதுப்பட தலைப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. மலையாளத்தில் நயன்தாரா - திலீப் நடித்து சித்திக் இயக்கிய பாடிகார்ட் படத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் சித்திக்.

அசின் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு காவல்காரன் என்று ‌பெயரிடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்து சத்யா மூவிஸ் தயாரித்து 1967ம் ஆண்டு வெளிவந்த காவல்காரன் படத்தின் தலைப்பை விஜய் படத்துக்கு வைக்கக்கூடாது என்று சத்யா மூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சத்யா மூவிஸ் நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், `விஜய் இப்போது நடித்து வரும் புதிய படத்துக்கு `காவல்காரன்' என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பின் உரிமையை யாருக்கும் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே அந்த படத்துக்கு காவல்காரன் என்று பெயர்வைப்பதற்கு அனுமதிக்க கூடாது'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

இதை தொடர்ந்து தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. பழைய பட தலைப்பை வைக்கும்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெறுவதுடன், மறுப்பு இல்லாத சான்றிதழும் வாங்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் அந்த தலைப்பை வைக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதி இருக்கிறது.

எனவே உங்கள் படத்துக்கு வேறு தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து விஜய் படத்தின் பெயர் `காவல் காதல்' என்று மாற்றப்பட்டு இருக்கிறது.

1 comments:

vijay said...

இப்படத்திற்கு காவல்காரன் என்ற தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், மீடியாக்களில் இப்படத்தின் செய்திகளில் காவல்காரன் என்ற தலைப்பை பயன்படுத்தியே எழுதிவந்தன.neengale thalaipu kodukureenga ippo neengale illai entu sollureenga ... appuram yanda ithil vijay ai ilukireenga arivu ketta mundangala neenga?

Post a Comment

Related Posts with Thumbnails