அஜித்தின் மங்காத்தாவுக்கு சிக்கல்

அஜித்தின் அடுத்த படத்தற்கு மங்காத்தா என தலைப்பிட்டிருந்தார் அப்படத்தை இயக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்போது அந்த தலைப்புக்கு சிக்கல் வந்திருக்கிறது.

தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜித் ஜோடியாக நீது சந்திரா நடிக்கவிருக்கிறார். தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித், சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் மங்காத்தா என்ற தலைப்புக்கு சிக்கல் வந்துள்ளது. ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையையும் தயாராக வைத்திருக்கும் அவர், எக்காரணம் கொண்டும் மங்காத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டேன், என்று விடாப்பிடியாக கூறி விட்டாராம். வெங்கட்பிரபு, அஜித் என முக்கிய புள்ளிகள் பேசியும் மசியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மங்காத்தா தலைப்பு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மற்றும் நாயகன் அஜித்திடம் ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

ஏற்கனவே மணிரத்னம் தனது படத்திற்கு ராவணன் என பெயர் சூட்டிய பின்னர் வேறொருவர் அந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்து, அவரிடம் பெரும் தொகை கொடுத்து தலைப்பை வாங்கியது ஞாபகம் இருக்கலாம். தற்போது சூட்டிங்கில் இருக்கும் விஜய்யின் காவல் காதல் படத்திற்கு கூட முதலில் காவல்காரன் என பெயரிட்டு விட்டு, கடைசியில் காவல் காதல் என மாற்றும்படியானது.

இப்போது அஜித் படத்திற்கும் அதே சிக்கல் வந்திருக்கிறது. தலைப்பை வைக்கும் முன்... அந்த தலைப்பு ஏற்கனவே யாரிடம் இருக்கிறது என விசாரிக்காமல் வைத்தால் இப்படித்தான் வீண் குழப்பமும், பண விரயமும் ஏற்படும் என்கிறார் விவரமறிந்த கோடம்பாக்கத்துக்காரர் ஒருவர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails