அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி

இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும்.

இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்றுக் கொள்வதிலும் இந்த கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும். மேலும் மாநில மொழிகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்த தெளிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இதன் மூலம் மக்களிடையே கம்ப்யூட்டர் கற்றவர்கள் மற்றும் அறியாதவர்கள் என்ற இடைவெளி குறைய இவை பயன்படும். கம்ப்யூட்டர்கள், அவை இயங்கத் தேவையான சாப்ட்வேர், கல்வி சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், மின்சார இணைப்பு, யு.பி.எஸ்., இணைய இணைப்பு ஆகியவை ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும்.

இந்த தகவலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் மூலம் 1.5 கோடி மாணவர்களும் 10 லட்சம் ஆசிரியர்களும் பயனடைய இருப்பதாக பிரதமர், திட்டம் தொடங்கியபோது தெரிவித்தார்.

இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதில் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. பத்து கம்ப்யூட்டர்கள், யு.பி.எஸ். , பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பு ஆகிய சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் மிகத் தாமதமாகத்தான் இவை இன்ஸ்டால் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இவற்றிற்கான தனி அறைகள் இல்லை என்பதால், பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைகள் அல்லது ஆசிரியர் அமரும் அறைகளிலேயே இவை வைக்கப்படுகின்றன.

இதனால் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் சுதந்திரமாக இவற்றை இயக்கிக் கற்றுக் கொள்வதில் தடங்கல் ஏற்படுகின்றன. மேலும் இவற்றைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி தரப்படுவதில்லை.

எனவே திட்டத்திற்கு நிதியும் சாதனங்களும் தரப்படுவதோடு நிற்காமல், மாநில அரசுகளின் துறை அதிகாரிகள் இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தர வேண்டும்

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்

காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O)அழுத்தவும்.

எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

விப்ரோ நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு கம்ப்யூட்டர்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ லிமிடெட் தற்போது மறு சுழற்சி செய்யும் வகையில் நச்சுத் தன்மை அற்ற கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகைய கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்டல் டியூயல் கோர் தயாரிப்புகள் இதில் இடம்பெறும்.

இதன் மூலம் கார்சினோஜெனிக் எனப்படும் நச்சுத்தன்மை அற்ற கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளது. இவற்றை மறு சுழற்சி செய்யலாம்.

இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். இந்த கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் அனுராக் பெஹர் தெரிவித்தார்

தண்ணீர் + அதிர்ச்சி பாதிக்காத டூயல் சிம் மொபைல்கள்

எந்த வேலை பார்த்தாலும் கூடவே வைத்துக் கொள்ளும் மொபைல் போன்கள் நிச்சயம் தண்ணீரில் விழவும், கீழே விழவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே இந்த சூழ்நிலைகளினால் கெட்டுப் போகும் வாய்ப்புகள் இல்லாத மொபைல் போன்களை நாம் நிச்சயம் விரும்புவோம். அனைத்து மொபைல் போன்களும் இந்த தன்மையினை ஓரளவிற்குக் கொண்டிருந்தாலும், சில நிறுவனங்கள் இந்த தன்மையினை முக்கியமானதாகக் கொண்டு மொபைல் போன்களை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் மொவில் (Movil) என்னும் பெயரில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் பிலிங் டெலிகாம்(Bling Telecom) நிறுவனம் MA1 மற்றும்MT1 என்ற பெயர்களில் இரண்டு மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு போன்களும் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைக் கொள்ளக் கூடிய திறன் கொண்டவை ஆகும். இதில் MA1 போன் அசைவுகளுக்கேற்ப இயங்கும் டச் போனாகும்.

MT1 மொபைல் போனில் டிஜிட்டல் கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 2 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய மெமரி, டூயல் ஸ்பீக்கர்கள், புளுடூத் ஆகிய வசதிகள் உள்ளன.

ஆரஞ்ச் மற்றும் பச்சை ஆகிய மெடலிக் வண்ணங்களில் இது தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. குறியீட்டு விலை ரூ.4,200.

MT1 மொபைல் போன் 3 அங்குலத்தில் அதிக ரெசல்யூசனுடன் கூடிய திரை கொண்டதாக அமைந்துள்ளது. இதில் கம்ப்யூட்டர் டெஸ்க் டாப் அமைப்பில் யூசர் இன்டர்பேஸ் தரப்படுகிறது.

3.2 மெகா பிக்ஸெல் கேமரா, A2DP இணைந்த புளுடூத், வீடியோ பிளேயர், எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. இது அசைவிற்கேற்ப இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதனால் போனை அசைத்து வால் பேப்பர் களையும் பாடல்களையும் மாற்றலாம்.

போனை அசைத்து அதன் மணி ஓசையை அமைதிப்படுத்தலாம். இதன் குறியீட்டு விலை ரூ. 5,500

அதிவேக இன்டர்நெட்: வி ப்ளாஷ்

இளைஞர்களை இலக்காகக் கொண்டு தன் மொபைல் சேவையை வழங்கி வரும் வெர்ஜின் மொபைல் நிறுவனம், அண்மையில் விப்ளாஷ்(VFlash) என்னும் அதிவேக இன்டர்நெட் சேவையினையும் தந்துள்ளது.

எப்போதும் இணையத் தொடர்பில் இருக்க விருப்பப்படும் இளைஞர்களுக்கென இந்த விப்ளாஷ் மோடம் அறிமுகப்படுத்தப் படுவதாக இந்நிறுவன தலைமை அதிகாரி மதுசூதன் கூறினார்.

விப்ளாஷ் மோடத்தைப் பயன்படுத்தி நல்ல வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை எங்கு வேண்டுமானாலும் பெறலாம். மாதக் கட்டணம் ரூ.250 முதல் ரூ.1,000 வரை உள்ளது. இந்த விப்ளாஷ் யு.எஸ்.பி. மோடம் விலை ரூ.3,499.

இதன் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் 8ஜிபி. இன்டர்நெட் வேகம் விநாடிக்கு 3.1 மெகா பிட்ஸ். இதனுடன் விப்ளாஷ் டிவி, ஆன் டிமாண்ட் டவுண்லோட் போன்ற சேவைகள் இணைத்துத் தரப்படுகின்றன.

விப்ளாஷ் டிவி பயன்படுத்தி 40 பிரபலமான டிவி சேனல்களைப் பார்க்கலாம். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டினைத் தொடர்ந்து அதிகமாக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு இது போன்ற புதிய சாதனங்கள் கை கொடுக்கும்.

விர்ஜின் மொபைல் சேவை டாட்டா டெலிசர்வீசஸ் மூலம் இந்தியாவில் வழங்கப்படுகிறது

வீடியோகான் - 15 புதிய மாடல் மொபைல் போன்

வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக 15 புதிய மாடல் மொபைல் போன் களை வீடியோகான் நிறுவனம் வெளியிட உள்ளது.

மொபைல் போன் சந்தையில் அண்மையில் நுழைந்த வீடியோகான் வெகு வேகமாக செயல்பாட்டினை மேற்கொண்டுள்ளது. எப்படியும் இந்த ஆண்டில் 10%க்கு மேலாக இந்த சந்தையில் இடம் பிடித்து, மூன்றாவது இடத்தினைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதற்கென வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக 15 புதிய மாடல் மொபைல் போன்களை வெளியிடத் திட்டமிடுகிறது. இந்த தகவலை அண்மையில் மும்பையில் இதன் தலைமை நிர்வாகி ராஹுல் கோயல் தெரிவித்தார்.

தற்போது வீடியோகான் 12 மாடல் போன்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 1,600 முதல் ரூ. 18,500 வரை உள்ளது.

டிவி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் விற்பனையில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் எப்படியும் மொபைல் போன் விற்பனையிலும் கணிசமான வர்த்தகத்தினைக் கொள்ள முயற்சிக்கிறது.

வீடியோகான் தயாரிக்கும் சாதனங்கள் மேற்கு ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜிமெயிலில் சிக்கலா?

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்;

அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.

கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile)ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரிhttp://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும்.

இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும்.

இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம்.

இதனைப் பெற http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் (டிஎணிணிஞ்டூஞு) வசதி. நீங்கள் டிஎணிணிஞ்டூஞு பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம்.

இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம்.

சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும்.

ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை

ஆரோக்​கிய சமை​யல்!

* காய்​கறி சாலட் செய்​யும்​போது ஒரு கைப்​பிடி பாசிப் பருப்பை அரை​மணி நேரம் ஊற வைத்து சேர்த்​துக்​கொள்​ளுங்​கள் சத்​துக்​கும் சத்து;​ சுவைக்​கும் சுவை!​

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்​களை அரைத்​தும்,​​ ஒரு ஸ்பூன் சீர​கத்​தைப் பொடித்​தும் போட்டு பஜ்ஜி செய்​தால்,​​ பஜ்ஜி நல்ல சுவை​யு​ட​னும் இருக்​கும்.​ கடலை மாவி​னால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும்.​

* மோர்க் குழம்பு செய்ய சமான்​களை வறுத்​து​விட்டு,​​ தேங்​காய்க்​குப் பதி​லாக பச்​சை​யா​கவே துளி கச​க​சாவை போட்டு அரைத்து மோர்க்​கு​ழம்பு செய்து பாருங்​கள்.​ சுவை​யாக இருக்​கும்.​ தேங்​காய் போடா​த​தால் கொலஸ்ட்​ரால் குறை​யும்.​ கச​கசா போடு​வ​தால் வயிற்​றுக்கு குளுமை.​

* உளுந்து -​ அரை கப்,​​ அரிசி -​ கால் கப்,​​ சிறிது வெந்​த​யம் இவை​களை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்​வ​ரகு மாவு​டன் கலந்து மறு​நாள் காலை தோசை வார்க்​க​வும்.​ சத்​தான,​​ சுவை​யான தோசை தயார்.​

* துவ​ரம் பருப்​புத் துவை​யல் தயார் செய்​யும்​போது,​​ சிறிது கொள்​ளினை​யும் வறுத்​துச் சேர்த்து அரைத்​தால் சுவை​யும் மண​மும் கூடு​த​லாக இருக்​கும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* சாம்​பார்,​​ கீரை,​​ புளிப்பு கூட்டு போன்​ற​வற்​றைக் கொதித்து இறக்​கும் சம​யம் துளி வெந்​த​யப் பொடி தூவி இறக்​கி​னால் நல்ல வாச​னை​யாக இருக்​கும்.​ உட​லுக்​கும் ஆரோக்​கி​யம்.​

* எந்த வகை கீரை​யா​னா​லும் அதைச் சமைக்​கும்​போது அள​வுக்கு மீறி காரம்,​​ உப்பு,​​ புளி இவற்றைச் சேர்த்து சமைத்​தால்,​கீரை​யி​லுள்ள சத்​துக்​கள் முழு​மை​யாக கிடைக்​காது.​

* வெந்​த​யத்​தைக் கறுப்​பாக வறுத்​துத் தூள் செய்து காப்​பிப் பொடி​யில் கலந்து காப்​பிப் போட்​டுக் குடித்​தால் சர்க்​க​ரை வியா​தி​கா​ரர்​க​ளுக்கு நல்​லது.​

* இரண்டு மிளகு,​​ அரை ஸ்பூன் தனியா -​ தூள் செய்து தேநீர் கொதித்து வரும்​போது தூவி இறக்கி வடி​கட்டி சர்க்​கரை கலந்து சாப்​பிட உடம்​புக்​கொரு ஊட்​டச்​சத்து கிடைத்து களைப்பு நீங்​கும்.​

* மழை மற்​றும் குளிர் காலங்​க​ளில் தயிர் உறை​யாது.​ உறை​யூற்​றும்​போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்​தி​ரத்​தை​யும் கவிழ்த்து மூடி​விட்​டால் விரை​வில் உறைந்​து​வி​டும்.​

* மிக்​ஸி​யில் மாவு அரைக்​கும்​போது அது எளி​தில் சூடா​கி​வி​டும்.​ சூட்​டைத் தணிக்க ​ மாவில் ஐஸ் வாட்​டர் தெளித்து அரைக்​க​லாம்.​​

* ரத்​தக்​கறை படிந்த துணி​களை உப்​புக் கலந்த தண்​ணீ​ரில் சிறிது நேரம் ​ ஊற வைத்து துவைத்​தால் கறை​கள் நீங்​கி​வி​டும்.​

* குழந்​தை​க​ளின் நகங்​க​ளில் அழுக்​குச் சேர விடக்​கூ​டாது.​ நகத்தை வெட்​டி​விட வேண்​டும்.​ அப்​படி வெட்​டு​வ​தற்கு முன்பு குழந்​தை​க​ளின் விரல்​க​ளைத் தண்​ணீர் முக்​கித் துடைத்​து​விட்டு,​​ அதன் மேல் பவு​ட​ரைப் பூசி​னால் ​ எது​வரை நகத்தை வெட்​ட​லாம் என்​ப​தைத் தெளி​வா​கக் காட்​டும்.​

* கார​ண​மின்றி திடீ​ரென வயிறு வலித்​தால்,​​ இரண்டு ஸ்பூன் சர்க்​க​ரையை வாயில் போட்​டுக் கொண்டு தண்​ணீர் குடித்​தால் ​ வலி பறந்​து​வி​டும்.​

பாலாவுக்கு தேசிய விருது

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாலா, 2008-ம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "நான் கடவுள்' படத்துக்காக பாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

56-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

இதில் அனிருத்தா ராய் செüத்ரி இயக்கிய "அந்தாகீன்' என்ற வங்க மொழிப் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சர்மிளா தாகூர், ராகுல் போஸ், அபர்ணா சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபாகர் பானர்ஜி இயக்கிய "ஒயே லக்கி ஒயே' ஹிந்திப் படம் சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

"ஜோக்வா' மராட்டிய மொழிப் படத்தில் நடித்த உபேந்திரா லிமயே சிறந்த நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கரு.பழனியப்பன் இயக்கிய "சிவப்பதிகாரம்' தமிழ்ப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். "ஜோக்வா' } சமூகப் பிரச்னைகளை நுணுக்கமான முறையில் வெளிப்படுத்தியதற்கான சிறந்த படம் என்ற விருதையும் பெற்றுள்ளது.

மதுர் பந்தார்கர் இயக்கிய "பேஷன்' ஹிந்திப் படத்தில் நடித்த முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே படத்தில் நடித்த கங்கனா ரணாவத் சிறந்த துணை நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"ராக் ஆன்' ஹிந்திப் படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆர்யா, பூஜா ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடிக்க பாலா இயக்கிய படம் "நான் கடவுள்'. எழுத்தாளர் ஜெயமோகனின் "ஏழாவது உலகம்' என்ற புத்தகத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்துள்ளார்.

காசியில் உள்ள தபஸ்விகளான "அகோரிகள்' மற்றும் சக மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு வாழ்வின் விளிம்பு நிலையில் வாழும் ஆதரவற்றவர்கள் ஆகியோரைப் பற்றி யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துக்கூறிய இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, ரசிகர்களுக்குப் புதிய கதைக் களத்தையும் வித்தியாசமான அனுபவத்தையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தை இயக்கியதற்காக பாலா சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"நான் கடவுள்' படத்தில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் மூர்த்தி, சிறந்த "மேக்கப் மேன்' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கெüதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "வாரணம் ஆயிரம்' சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

"தேங்க்ஸ் மா' ஹிந்திப் படத்துக்கு இசையமைத்த சாம்ஸ் படேல் சிறந்த இசையமைப்புக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "ஜோக்வா' ஹிந்தி திரைப்படத்தில் பாடிய ஹரிஹரன் சிறந்த பின்னணிப் பாடகராகவும் "அந்தாகீன்' வங்க மொழிப் படத்தில் பாடிய ஷ்ரேயா கோஷல் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதுதில்லியில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசிய விருதுகளை வழங்குகிறார்

சமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009

நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டு, இணையத்தில் சமுதாய தளங்கள் என்று அழைக்கப்படும் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் (twitter) போன்ற தளங்களின் அமைப்பிலும், உட்பொருளிலும் பெருத்த மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டன.

அதுவரை என்ன பீட்ஸா சாப்பிட்டேன்; எந்த தேர்வில் பிரச்னை அதிகம் இருந்தது; தீம் பார்க்கில் ஏன் பெண்கள் கூட்டம் அதிகம் போன்ற கதைகள் இல்லாமல், உலகத்தைப் பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள், அரசியல் மாற்றங்கள், விமான விபத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவை அதிக இடம் பெற்றன.

பொதுவாக இளைஞர்களும், டீன் ஏஜ் கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்த சோஷியல் தளங்களில் பல அனுபவஸ்தர்களும் எழுதத் தொடங்கினார்கள். இதனால் பழைய தலைமுறை அனுபவ வாதிகளுக்கும், புதிய இளைய தலைமுறைக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது.

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அம்மா, அப்பா ஏன் பாட்டி கூட ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இடம் பிடித்து கருத்துக்களைப் பரிமாறத் தொடங்கினர்.

இந்த தளங்களைப் பயன்படுத்தும் இணைய நேயர்களின் எண்ணிக்கை 2009ல் அதிகமாகியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தன் 35 ஆவது கோடி பயனாளியை அடையாளம் காட்டியது. ஏப்ரல் மாதத்தில் இந்த தளத்தின் பயனாளர்கள் 1390 கோடி நிமிடங்கள் தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இது சென்ற 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 700 சதவீதம் கூடுதலாகும்.

பேஸ்புக் நேயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்றால், நிச்சயம் வேறு ஒரு தளத்திலிருந்து இங்கு வந்தவர்களா கத்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களில் பலர் மை ஸ்பேஸ் (space) தளத்திலிருந்து வந்தனர்.

சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணி தளமாக, முதலில் வந்த சிலவற்றில் ஒன்றாகும் இது. ஆனால் 2009 ஆம் ஆண்டில், இதன் பங்கு 55 சதவிதத்திலிருந்து 30.26 சதவீதம் ஆகக் குறைந்தது.

இந்த ஆண்டில் இந்த இரு தளங்களும் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் பல ஒப்பந்தங்களில் இவை ஈடுபட்டு வருகின்றன

ஆப்பிள் ஸ்டோரில் 300 கோடி டவுண்லோட்

பாடல்கள், கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் எனத் தன் படைப்புகளை வாடிக்கையாளர்கள் எளிதாக டவுண்லோட் செய்திட ஆப்பிள் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் App Store என்ற தளத்தைத் தொடங் கியது.

சென்ற வாரம் இந்த தளத்திலிருந்து செய்யப்பட்ட டவுண்லோட் புரோகிராம்களின் எண்ணிக்கை 300 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. தொடங்கும் போது 500 அப்ளிகேஷன்கள் இதில் இருந்தன.

தற்போது ஐபோன் மற்றும் ஐபாட் டச் போன்களுக்கான அப்ளிகேஷன்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளன. இவற்றில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களும் உண்டு. ஆப் ஸ்டோர் தள செயல்பாடு இன்டர்நெட் உலகில் புதுமையைப் படைத்தது.

இதனைப் பின்பற்றி மற்ற மொபைல் நிறுவனங்களும் இதே போன்ற ஸ்டோரினைத் தொடங்கின என்பதே இதன் வெற்றிக்கு அடையாளம் ஆகும்.

எல்.ஜி., ரிசர்ச் இன் மோஷன், நோக்கியா, கூகுள், பால்ம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர் தளங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றன. இருப்பினும் ஆப் ஸ்டோர் போல எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர்

மொஸில்லா நிறுவனம், மொபைல் போன்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பை வெளியிட உள்ளதாக செய்தி வந்ததிலிருந்து பலரும் அதனை எதிர்பார்த்திருந்தனர்.

முதலில் இது தாமதமாகும் என்ற செய்தி கிடைத்தது. ஆனால் இப்போது நோக்கியா என்900 மொபைல் போனுக்கான இறுதி சோதனைப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பென்னக் (Fennec) என்று அழைக்கப்படும் இந்த பிரவுசரை நோக்கியா என்810 போனிலும் பயன்படுத்தலாம்.

உங்களிடம் இந்த போன்களில் ஒன்று இருந்தால் http://www.unwiredview. com/2010/01/01/mozillafirefoxrc1formaemonokian900n810availablefordownload// என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த பிரவுசர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

இந்த பிரவுசரிலும் டேப்கள் வழி பிரவுசிங், மெனுபார், பாஸ்வேர்ட் மேனேஜர், போன் பயன்படுத்தப்படும் இடம் அறிந்த செயல்பாடு, ஒரே கீ வழி புக் மார்க் செய்தல், டெஸ்க்டாப் கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்துதல் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன.

பன்னாட்டளவில் 30 மொழிகளை இது சப்போர்ட் செய்கிறது
Related Posts with Thumbnails