Saturday, January 2, 2010

அனிமேஷன் நிறுத்தவும் இயக்கவும்

பவர் பாயிண்ட் பிரசண்டேஷ னின் தனிச் சிறப்பு அதில் அனிமேஷன் தரும் வகையில் சில ஆப்ஜெக்டுகளை அமைப்பதுதான். ஒவ்வொரு ஸ்லைடிலும் அனிமேஷன் வரும் வகையில் சிலர் அமைத்திருப் பார்கள்.


ஆனால் எப்போதும் அனிமேஷன்களை இயக்கினால் அதில் வேறு சில எடிட்டிங் வேலைகளை மேற்கொள்வது சிரமமாகிவிடும். எனவே வேண்டும்போது அவற்றை இயக்கவும் வேண்டாதபோது நிறுத்தி வைக்கவும் வேண்டும்.


இதற்காக ஒவ்வொரு ஸ்லைடாகச் சென்று ஒவ்வொரு அனிமேஷனை நிறுத்தவும் முடியாது. ஒரே கட்டளையில் நிறுத்தவும் இயக்கவும் பிரசன்டேஷன் சாப்ட்வேரில் வழி உள்ளது. நிறுத்தப்பட வேண்டிய ஸ்லைட் ஷோவினை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் “Set Up Show” என்ற பிரிவிற்குச் செல்லவும்.


இதனைக் கிளிக் செய்தால் “Set Up Show”என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த விண்டோவில் Show options என்ற பிரிவில் Show without animation என்பதில் டிக்செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும்.


இனி ஸ்லைட் ஷோவினை இயக்கினால் அனிமேஷன்கள் இயங்காது. மீண்டும் வேண்டும் என்றால் முதலில் கூறிய பிரிவுகளுக்குச் சென்று Show without animation என்ற இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...