குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்

1. Cabir.A:

தெரிந்த காலம் – ஜூன் 2004. சிம்பியன் 60 சிஸ்டத்தில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. புளுடூத் வழி பரவியது. சேதம் விளைவிக்கவில்லை. மேலும் தகவல்களுக்குhttp://www.fsecure. com/vdescs/cabir.shtml


2. Skulls.A:

தெரிந்த காலம் – நவம்பர் 2004. பல சிம்பியன் சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. அழைப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் தவிர, பிற அனைத்து வசதிகளையும் தான் சென்றடைந்த மொபைல் போனில் முடக்கியது. மேலும் தகவல்களுக்குhttp://www.fsecure.com/vdescs/skulls.shtml


3.Commwarrior:

தெரிந்த காலம் – ஜனவரி 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. புளுடூத் மற்றும் எம்.எம்.எஸ். வழி பரவியது. அட்ரஸ் புக்கில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் பெரிய அளவில் எம்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி போன் கட்டணத்தை அதிகமாக்கியது. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/commwarrior. shtml


4. Locknut.B:

தெரிந்த காலம் – மார்ச் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. சிம்பியன் 60 சிஸ்டங்களுக்கான பேட்ச் பைல் போல தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போனில் உள்ள சிஸ்டம் பைல்களை சிதைக்கும் வேலையை இது மேற்கொள்ளும். மேலும் மற்ற மால்வேர் ரோகிராம்களையும் பதிந்து வைக்கும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure. com/vdescs/locknut_b.shtml


5. Fontal.A :

தெரிந்த காலம் – ஏப்ரல் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போன் தொடங்கும்போது இயங்கும் சிஸ்டம் பைல்களை முடக்கும். போனை முழுவதுமாக சிதைக்கும் வேலையை மேற்கொள்ளும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/fontal_a.shtml

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails