கின்னஸ் சாதனை

உலகிலேயே மிக உயரமான கட்டிடம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் காலியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடம் 164 மாடிகளை கொண்டது.672 மீட்டர் அதாவது 2204 அடி உயரம் உடையது. இக்கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை படைக்க அந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதிக்க 2 இளைஞர்கள் தயாராக உள்ளனர். அவர்களது பெயர் ஒமர் அல்ஹெகலன், நசீர் அல் நெயாடி.

வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இக்கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே குதிக்க உள்ளனர். இவர்களுக்கு எமிரேட் விமான கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

பாராசூட் விரியும் முன்பு இவர்கள் 2204 அடி உயரத்தில் இருந்து மணிக்கு 136 மைல் வேகத்தில் 1 1/2 நிமிடத்துக்கு முன்பே குதிக்க திட்டமிட்டுள்ளனர்.

புர்ஜட் காலிபா கட்டிடத்தில் இருந்து குதிக்க உள்ள அல் நெயாடி ஏற்கனவே மிக உயர மலை சிகரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குதித்து உலக சாதனை படைத்தவர். தற்போது கட்டிடத்தில் இருந்து குதிக்க இருப்பது சுகமான ஒரு புதிய அனுபவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails