வீடியோகான் - 15 புதிய மாடல் மொபைல் போன்

வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக 15 புதிய மாடல் மொபைல் போன் களை வீடியோகான் நிறுவனம் வெளியிட உள்ளது.

மொபைல் போன் சந்தையில் அண்மையில் நுழைந்த வீடியோகான் வெகு வேகமாக செயல்பாட்டினை மேற்கொண்டுள்ளது. எப்படியும் இந்த ஆண்டில் 10%க்கு மேலாக இந்த சந்தையில் இடம் பிடித்து, மூன்றாவது இடத்தினைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதற்கென வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக 15 புதிய மாடல் மொபைல் போன்களை வெளியிடத் திட்டமிடுகிறது. இந்த தகவலை அண்மையில் மும்பையில் இதன் தலைமை நிர்வாகி ராஹுல் கோயல் தெரிவித்தார்.

தற்போது வீடியோகான் 12 மாடல் போன்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 1,600 முதல் ரூ. 18,500 வரை உள்ளது.

டிவி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் விற்பனையில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் எப்படியும் மொபைல் போன் விற்பனையிலும் கணிசமான வர்த்தகத்தினைக் கொள்ள முயற்சிக்கிறது.

வீடியோகான் தயாரிக்கும் சாதனங்கள் மேற்கு ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails