மொபைல் சேவை வழங்குவதில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் வெர்ஜின் மொபைல் நிறுவனம் அண்மையில் வயர்லெஸ் இன்டர்நெட் வழங்கும் துறையில் தன் காலடியை எடுத்து வைத்துள்ளது.
சி.டி.எம்.ஏ. வகைத் தொடர்பில் இன்டர்நெட் இணைப்புக்குப் பயன்படுத்த வி–லிங்க் என்ற யு.எஸ்.பி.மோடம் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக 1 ஜிபி அளவிற்குத் தகவல் சேமிக்கும் வசதியும் இதில் உள்ளது.
ரூ.2,100 விலையில் விற்கப்படும் இந்த மோடத்தினை வாங்குவோருக்கு தொடக்க கட்டணமாக ரூ. 99 வசூலிக்கப்பட்டு முதல் மாதத்தில் இலவச தகவல் பரிமாற்ற வசதி தரப்படுகிறது.
பின் மாதம் ரூ. 801 செலுத்தி நேரம் மற்றும் தகவல் அளவு வரையறையின்றி இன்டர்நெட் இணைப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம். முதல் மாத இலவச வசதியினைப் பயன்படுத்தாதவர்கள் ரூ.349 செலுத்தி அதனையும் அடுத்த மாத பயன்பாட்டுடன் சேர்த்து அனுபவிக்கலாம்.
இந்த வி–லிங்க் மோடத்தினை எந்தக் கம்ப்யூட்டருடனும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனம் போல இணைத்துப் பயன்படுத்தலாம். இதற்கான டிரைவர்கள் இந்த மோடத்திலேயே பதிந்து தரப்படுவதால் இன்ஸ்டலேஷன் மற்றும் இயங்குவதற்கான பிரச்சினை எதுவும் வராது.
இதில் 1 ஜிபி டேட்டாவினையும் கொண்டு செல்லலாம் என்பதால் நமக்குப் பிடித்தமான இன்டர்நெட் பிரவுசர் செட்டிங்குகளை எடுத்துச் செல்லலாம். கேட்க மற்றும் பார்க்க விரும்பும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களையும் எடுத்துச் செல்லலாம்.
இந்தியாவில் கம்ப்யூட்டர் வாங்குவோரில் 32% பேர் இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 44% பேர் 19 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே. எனவேதான் இளைஞர்களை இலக்காக வைத்தே செயல்படும் வெர்ஜின் மொபைல் இந்த சேவையிலும் இறங்கியுள்ளது என்று இதன் தலைமை அதிகாரி மதுசூதன் தெரிவித்தார்.
சார்க் நாடுகளுக்கான மொபைல் பேசி அமைப்பு அண்மையில் வாடிக்கையாளர்களுக்கான மன நிறைவு அளிக்கும் வகையில் மொபைல் சேவையினை வழங்குவதில் 2008க்கான முதல் இடத்தை வெர்ஜின் மொபைல் நிறுவனத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment