நோக்கியா 5530, 5230 அறிமுகம்

நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் வரிசையில் அதிகம் பேசப்பட்ட 5530 மற்றும் 5230 மாடல் மொபைல்கள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


இதில் 5530 மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேமில் வடிவமைக்கப்பட்டு, பார்க்க கவர்ச்சியானத் தோற்றம் கொண்டுள்ளது. இதன் தொடுதிரை 2.9 அங்குல அகலம் உள்ளது. 3ஜி, எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பங்களைக் கொண்டு இயங்குகிறது.

வை–பி, A2DP கொண்ட புளுடூத், யு.எஸ்.பி.2, 3 மெகா பிக்ஸெல் கேமரா, ஸ்டிரியோ எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் குறியீட்டு விலை ரூ. 14,029

5230 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனில் மேலே சொல்லப்பட்ட வசதிகளில் வை–பி இல்லை. திரை 3.2 அங்குல அகலம் உள்ளது. கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. இதன் விலை ரூ. 9,389. இந்த இரண்டு போன்களையும் பிரபல பின்னணிப் பாடகி ஷாலினி விற்பனைக்கு அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார்.


இரண்டு சிம், 5 எம்பி கேமரா போன்


இரண்டு சிம்கள் இணைந்து செயலாற்றும் மொபைல் மாடல்களுக்குப் பெயர் பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ், அண்மையில் இரண்டு சிம் மற்றும் 5 எம்பி திறன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் மற்றும் அசைவினால் பாதிப்பு இல்லாத தன்மை கொண்ட கேமரா இணைந்த மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த கேமராவில் ஆட்டோ போகஸ், முகமறிந்து எடுத்தல், டூயல் எல்.இ.டி. பிளாஷ், விநாடிக்கு 30 பிரேம் வேகத்துடன் வீடியோ ரெகார்டிங் ஆகிய வசதிகளும் உள்ளன. மேலும் இதில் உள்ள எப்.எம். ரேடியோ ரெகார்டிங் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

இதன் மெமரியை 16 ஜிபி வரை நீட்டிக்கலாம். இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் மற்றும் ஜாவா தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இந்த மாடல் எண் எம்–7070 (M7070). . இதன் குறியீட்டு விலை ரூ.7,999

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails