பாடல்கள், கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் எனத் தன் படைப்புகளை வாடிக்கையாளர்கள் எளிதாக டவுண்லோட் செய்திட ஆப்பிள் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல் App Store என்ற தளத்தைத் தொடங் கியது.
சென்ற வாரம் இந்த தளத்திலிருந்து செய்யப்பட்ட டவுண்லோட் புரோகிராம்களின் எண்ணிக்கை 300 கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. தொடங்கும் போது 500 அப்ளிகேஷன்கள் இதில் இருந்தன.
தற்போது ஐபோன் மற்றும் ஐபாட் டச் போன்களுக்கான அப்ளிகேஷன்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளன. இவற்றில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களும் உண்டு. ஆப் ஸ்டோர் தள செயல்பாடு இன்டர்நெட் உலகில் புதுமையைப் படைத்தது.
இதனைப் பின்பற்றி மற்ற மொபைல் நிறுவனங்களும் இதே போன்ற ஸ்டோரினைத் தொடங்கின என்பதே இதன் வெற்றிக்கு அடையாளம் ஆகும்.
எல்.ஜி., ரிசர்ச் இன் மோஷன், நோக்கியா, கூகுள், பால்ம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர் தளங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றன. இருப்பினும் ஆப் ஸ்டோர் போல எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை
0 comments:
Post a Comment