நாளைய டிஸ்க் உலகை ஆளப் போகும் புளு ரே தொழில் நுட்பம் எச்.டி. டிவிடியைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியதனால் பல நிறுவனங்கள் புளு ரே டிஸ்க் ரைட்டரைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரத் தொடங்கிவிட்டனர்.
லேப் டாப் மற்றும் டெஸ்க் டாப் ஆகிய இரண்டிற்கும் இவை வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எல்.ஜி. வழங்கியுள்ள GGWH20L எண் புளு ரே டிஸ்க் ரைட்டர் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 6து புளு ரே டிஸ்க்கில் எழுதலாம்; எச்.டி. டிவிடி டிஸ்க்குகளை இயக்கலாம்;
வழக்கமான சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம். லைட் ஸ்கிரைப் சாப்ட்வேர் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை நம் பர்ஸை பர்ன் செய்கிறது.
ரூ.29,000 என்பது மிக அதிகம். புதிய சாதனங்களை அவை வந்தவுடன் வாங்குவதில் முயற்சிப்பவர்கள் இதனை வாங்கலாம். புளு ரே டிஸ்க்குகளும் தற்போது ஜப்பான் மற்றும் கொரியாவிலிருந்துதான் வர வேண்டியுள்ளன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment