மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்

வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும். 

இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். 

எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. 

தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார். 

முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். 

தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்

ஜிமெயில் பேக் அப் (ஆப்லைன்)

இந்த வசதியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் அவுட்லுக் போல தருவதற்கு கூகுள் முயற்சிகளை எடுத்துள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயெ உங்கள் இமெயில்களை இதில் கையாளலாம்.

பிரவுசரில் இயங்கும் ஜிமெயில் போன்ற சூழ்நிலையில் இயங்கும் வகையில் இந்த வசதி தரப்படுகிறது. எப்படி இருந்தாலும் இமெயில்களை அனுப்ப இணைய இணைப்பு வேண்டுமே என்று நீங்கள் எண்ணலாம்.

ஆனால் இமெயில் கடிதங்களை மெதுவாகவும் பொறுமையாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாமே. மேலும் ஜிமெயில் இந்த வசதியின் மூலம் உங்கள் இமெயில்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

எனவே எப்போதாவது ஜிமெயில் இன் பாக்ஸ் அளவிற்கு வரையறை அறிவிப்பு செய்தாலோ அல்லது ஜிமெயில் சர்வரே பிரச்சினை செய்தாலோ உங்கள் பழைய மெயில்கள் அனைத்தும் பத்திரமாக உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களுடைய அக்கவுண்ட்டினை பேக் அப் செய்திட முதலில் லேப்ஸ் சென்று அதற்கான செயல்பாட்டினை உணச்ஞடூஞு செய்திட வேண்டும். இதனை மேற்கொண்டவுடன் ‘Offline 0.1’ என ஒரு லிங்க் வலது மூலையில் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால் உங்கள் பிரவுசர் கூகுள் கியர்ஸ் (Google Gears) ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு அறிவுறுத்தும். (இந்த தொகுப்பு தற்போதைக்கு ஆப்பரா பிரவுசரில் இயங்காது.) நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால் இந்த கூகுள் கியர்ஸ் இயல்பாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். மற்ற பிரவுசர் பயன்படுத்துபவர்கள் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்து எஞுச்ணூண் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இதனை முழுமையாக இயங்க வைக்க கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். இப்போது கியர்ஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை ஒன்று உங்களிடம் கேட்கப்படும். உங்கள் ஜிமெயில்களை கம்ப்யூட்டரில் பேக் அப் எடுத்து வைக்கவா? என்று கேட்கப்படும்.

இந்த செய்திக்குப் பக்கத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். உடன் டெஸ்க் டாப்பில் இதற்கான ஷார்ட் கட் ஏற்படுத்தப்படும். உங்கள் மெயில்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் காப்பி செய்யப்படும்.

பொதுவாக நாம் ஜிமெயிலில் வரும் இமெயில் செய்திகளை அழிப்பதே இல்லை என்பதால் பேக் அப் செய்திட சிறிது நேரமாகும். இருப்பினும் கூகுள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மெயில் செய்திகளை பேக் அப் எடுக்காது. அதே போல ஸ்பேம் மற்றும் ட்ரேஷ் பெட்டிகளில் உள்ள மெயில்களும் கம்ப்யூட்டருக்கு வராது.


இனி இந்த பேக் அப் மெயில்களைப் பயன்படுத்தி உங்கள் மெயில்களுக்கான பதில்களையும் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதே நீங்கள் தயார் செய்திடலாம்.

பயர்பாக்ஸ் டேப் வழி பிரவுசிங்

நம்மில் பலர் விண்டோஸ் இயக்கத்தில் மல்ட்டி டாஸ்க்கிங் என்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். எடுத்துக் காட்டாக இணையத்தொடர்பில் ஒரு நண்பருடன் இன்ஸ்டண்ட் மெசேஜில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

அதே நேரத்தில் நமக்கு வந்துள்ள இமெயில் கடிதங்களை நம் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொண்டிருப்போம். வரும் வாரத்தில் என்ன என்ன ஸ்போர்ட்ஸ் முக்கியமாக நடக்கப் போகிறது என்றும் கவனிப்போம்;

இவற்றிற்கிடையே தங்கம் விலை ஏறுகிறதா இறங்குகிறதா என்றும் பார்ப்போம். இத்தனை செயல்களுக்கு இடையே அவசரமாய் அனுப்ப வேண்டிய கடிதத்தின் பிரிண்ட் அவுட் ஒன்றையும் பிரிண்டர் அச்சிட்டுக் கொண்டிருக்கும்.

இவை எல்லாம் ஒருவர் மல்ட்டி டாஸ்க்கிங் என்று சொல்லப்படும் ஒரே நேரத்தில் விண்டோஸ் இயக்கத்தில் பல்வேறான செயல்பாடுகளை மேற்கொள்கையில் திறன் இருந்தால் தான் மேற்கொள்ள முடியும்.


இப்படி திறமையுடன் நாம் அனைத்து செயல்பாடுகளிலும் மூழ்கிக் கொண்டிருக்கையில் நாம் எதிர்பாராத புரோகிராம் ஒன்று தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் திடீரென நுழைந்தால் நமக்கு எரிச்சல் தானே வரும்.

எனக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் இது வேறயா? என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. சரி எந்த வகை புரோகிராம் இது போல இடையே தலையைக் காட்டுகிறது?


அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நியூஸ் தளத்தின் லிங்க் ஒன்று திடீரெனத் திறக்கப்பட்டு தன் முகத்தைக் காட்டலாம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் காக்க வைத்திருக்கும் இமெயில் திறக்கப்பட்டு அதில் உள்ள லிங்க் திறக்கப்படலாம். அது எதுவாக இருந்தாலும் நம் பொறுமையைச் சோதிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.


சரிங்க! இதை எப்படி நிறுத்துவது? என்று நீங்கள் முணுமுணுக்கலாம். இதோ அதற்கான வழி. அதிர்ஷ்டவசமாக பயர்பாக்ஸ் இதற்கான சிறந்த வழியைத் தருகிறது. Tools, Options சென்று அங்குள்ள Advanced என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். Tabbed Browsing என்னும் பிரிவில் இந்த வகையில் புதியதாக தோன்றும் புரோகிராம்களை உங்களுடைய விருப்பங்களின் படி(preference) காட்டப்படுமாறு செட் செய்திடலாம்.

ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படுமாறு வைக்கலாம். அல்லது அண்மையில் திறக்கப்பட்ட ஒரு விண்டோவில் புதிய டேப்பாக அமைக்கலாம். இதை அமைத்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இந்த புதிய தோன்றல்கள் நீங்கள் செட் செய்தபடி அமையும்.

சரி, வாசகர் கோபால் அவர்களின் மெயின் கேள்விக்கு விடை அளித்தாயிற்று. அவர் மேலும் சில டிப்ஸ் கேட்டிருந்தார் அல்லவா! அதற்கு இதோ எனக்கு நினைவில் வந்த சிலவற்றைத் தருகிறேன்.


1. Ctrl + Tabஅழுத்தி உங்களுடைய டேப்களில் அமைக்கப்பட்ட வெவ்வேறு விண்டோக்களிடையே பயணம் செய்திடலாம்.

2. மிக அண்மையில் பார்த்த டேப்பினை மூட Ctrl + F4அழுத்தவும்.

3. Alt + F4 பயன்படுத்தினால் அந்த பிரவுசர் விண்டோவினை மூடலாம்.

4. ஒரு புதிய டேப் திறக்க Ctrl + T கீகளை அழுத்தவும்.

இந்த கீகள் தொகுப்பு அனைத்தையும் பயர் பாக்ஸ் பிரவுசரின் எந்த பதிப்பிலும் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7லும் பயன்படுத்தலாம்.


டேப் பிரவுசிங் பயன்படுத்தி இனிய இணைய பயணத்தைத் தொடருங்கள்

Microsoft showcases Indic language input tools

Microsoft showcased a set of tools that help users enter Indian language text into computers easily and quickly, at the Microsoft India Development Center in Hyderabad on Wednesday.

The beta version of the tools will be made available as a free download soon and will initially support the following six languages – Bengali, Hindi, Kannada, Malayalam, Tamil and Telugu. These tools have been engineered by the Emerging Markets Labs team of the Microsoft India Development Centre (MSIDC) and the technology can be leveraged to support other syllabic languages beyond Indian languages.

These input tools use free-form transliteration. Users spell Indian language words in a natural (phonetic) way using English alphabet, which the tools transliterate into the right words in the chosen Indian language.

“There is a huge demand to consume and interact with Indian language content today. Tools that make it easy to search, communicate and create content in Indian languages are key for broader computing adoption and the tools we are showcasing today are aimed at addressing this need,” said Srini Koppolu, Corporate VP & Managing Director, MSIDC


கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...

1.No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"

ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.


3.Track 0 not Found

டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.

1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:

1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.

1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..

1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.9.Bad command are file name..

நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.10.Insufficient Disk Space

டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டர்

ஒரு போல்டரை வ்ழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். (விரும்பினால் Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள்) அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள்.

அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கன்களைக் அங்கே காணலாம்.

அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும்பொது ஐக்கன்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம். அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும்.

அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கன். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான். இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த போல்டர் மறைந்து விடுவதைக் காணலாம்.

இந்த போல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டுப் பாதுகாக்கலாம். யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து (Hidden Folders) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பனதாகும்.

Tweets or bleats? Tool measures importance on Twitter

You've got followers and post regularly, but ever wondered how popular you are on Twitter? An online tool that evaluates "tweets" can tell.

Public relations consultancy Edelman recently launched TweetLevel (www.tweetlevel.com), a free tool that measures the importance of a user on the popular social networking site, how trusted they are as well as the influence they wield.

The tool uses an algorithm developed by the agency which takes into account the quality and quantity of "tweets" or micro-blogs of up to 140 characters, and allows users to compare their own importance to that of anyone they choose to follow.

"Unlike most rankings that look merely at the number of followers someone has, TweetLevel gives you a really clear picture of who is important within this increasingly influential forum," Jonny Bentwood, Edelman's Head of Strategic Analysis and who created the algorithm, said in a statement

The tool gives points to users in four categories -- how many people listen to what you say; how many people follow you; how actively you participate and whether people believe you.

Each score is rated out of 100, with the higher your score, the more important you are.

The statement said that entertainment blogger Perez Hilton, Hollywood actor Ashton Kutcher and social media blog Mashable were among the highest scorers on TweetLevel.


கடத்தல்காரர்களை பிடிக்க கம்ப்யூட்டர் 'கிளிக்' போதும்

கம்ப்யூட்டர் மவுசை தட்டினால் போதும் நம் நாட்டிற்கு வரும் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லும் கடத்தல்காரர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அதிகாரிகள் பெறலாம். இதற்காக, சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


கடத்தல்காரர்கள் நம்நாட்டிற்கு வந்தாலோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றாலோ அதிகாரிகளை எச்சரிக்கை செய்யும் வகையில், சாப்ட்வேர் ஒன்றை சுங்கத்துறையினர் வடிவமைத்துள்ளனர். இந்த சாப்ட்வேருக்கு, "மேம்பட்ட பயணிகள் தகவல் அமைப்பு' என பெயரிடப்பட்டுள்ளது.


இதில், ஏற்கனவே, கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு செய்து சுங்கத்துறையினரிடம் பிடிபட்டவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். அந்த குறிப்பிட்ட நபர் பயணம் செய்யும் போது, அவர்களின் பெயரை கம்ப்யூட்டர் திரையில் ஒலிபரப்பாகும். இந்த சாப்ட்வேர் கருவி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


சுங்கவரித்துறை இயக்குனரகம் இந்த சாப்ட்வேரை உருவாக்கி உள்ளது. இதனால், விமானம் மூலம் வெளிநாடு செல்பவர்கள் மற்றும் உள்நாட்டிற்கு வருபவர்கள் பற்றிய விவரங்கள் சுங்கத் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.


வெளிநாட்டில் இருந்து சந்தேகிக்கப்படும் வகையில் ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அவரை பற்றிய தகவல்கள், விமானம் அந்த நாட்டில் இருந்து புறப்பட்ட 15 நிமிடத்தில் எங்களுக்கு கிடைத்துவிடும். ஆனால், இதில், முதல் முறை குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பது சிறிது சிரமம்.


ஆனால், அவர்கள் அடிக்கடி, பிரச்னைக்குரிய இடத்திற்கு சென்று வந்தால், அதை பற்றி, கம்ப்யூட்டர் எங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும். ஒரு முறை எங்களுக்கு எச்சரிக்கை கிடைத்துவிட்டால், அதன் பின், அந்த நபரை தொடர்ந்து, கடுமையாக கண்காணிப்போம்.

கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவு செய்வதற்காக, வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி, பல்வேறு வரித்துறையினரிடமும், குற்றவாளிகள் பற்றி புலனாய்வுத் துறை,போலீசார் மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மைக்ரோசாப்ட் ஆன்லைன் சேவை

சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினை www.microsoft.com/india/onlineservices என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும்.

இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார்.

இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது.

இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன.

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய..

விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 


இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. 


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழையுங்கள். அங்கு. System தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error Reporting பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Disable Error Reporting தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். தொல்லை ஓய்ந்து விடும்.

விண்டோஸ் 7 இன்றைய நிலையில்

ஆப்பிள் நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஸ்நோ லியோபர்ட் வெளியிட்டது. கடந்த மூன்று மாதங்களாக இந்த சிஸ்டம் செயல்பாட்டில் உள்ளது. 

விண்டோஸ் 7 வெளியாகி இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்நோ லியோபர்ட் சிஸ்டத்தைக் காட்டிலும் அதிக அளவில் விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுகிறது. 

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. இது கொண்டிருக்கும் பங்கு 92.52% ஆகும். மேக் சிஸ்டம் 5.27%. லினக்ஸ் 0.96%. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் 1.25% பங்கைக் கொண்டிருக்கின்றன. 

விண்டோஸ் சிஸ்டங்களைப் பொறுத்தவரை விண்டோஸ் 7 2.15%, விஸ்டா 18.83%, எக்ஸ்பி 70.48% என்ற அளவில் இயங்குகின்றன

விண்டோஸ் 7 : திருட்டு நகல்இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. 

ஒரு சிலர் இணையத் தளங்களில் இருந்து இதுபோன்ற திருட்டு நகல்களை டவுண்லோட் செய்தும், அதிலிருந்து சிடிக்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஒரிஜினல் சிடிக்களுக்கு ப்ராடக்ட் கீ ஒன்றை, 16 எண் மற்றும் எழுத்துக்கள் கொண்டதாக, வழங்கும். 

அதனைச் சரியாக அமைத்தால் தான், இந்த புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். ஆனால் தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்புகளுக்கு அது போன்ற ப்ராடக்ட் கீ எதுவும் இல்லாமலே இயங்கும்படி இந்த திருட்டு நகல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

இது போன்ற திருட்டு நகல்கள் தயாரிக்கப்படுவது, சாப்ட்வேர் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலி யாய் இருந்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் இது போன்ற முயற்சிகள் பெருமளவில் நடந்தேறி வருகின்றன. 

இந்தியாவில் 208 கோடி டாலர் அளவிற்கு இந்த திருட்டு முயற்சிகளினால் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய விற்பனையில் வரி ஏய்ப்பும் ஏற்படுவதால் அரசுக்கு 20 கோடி டாலர் மதிப்பில் இழப்பு உண்டாகிறது.


டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது. 


இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருட்டு சாப்ட்வேர் சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர்கள் பல ஆபத்துக்களுக்கு உள்ளாவார் கள். முதலாவதாக இது சட்டப்படி தவறு. 

காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்து பவரைக் கைது செய்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும் என்றார். 

மேலும் கூறுகையில் திருட்டு சாப்ட்வேர் சிடிக்களுடன் பல மால்வேர் புரோகிராம்களும் இணைந்தே தரப்பட்டு, பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவருக்குச் செல்லும் அபாயமும் என்றார். 

மேலும் இது போன்ற திருட்டு புரோகிராம்களை விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் வெளியிட்ட சோதனைப் பதிப்புகளைக் காப்பி எடுத்து விற்பனை செய்வதாகவும், அதனால் முழுமையான பாதுகாப்பினை அவை பெற்றிருக்காது எனவும் கூறினார். மேலும் இவை ஜூன்1, 2010க்குப் பின் இயங்காது என்றும் கருத்து தெரிவித்தார். 

மேலும் தொழில் நுட்ப ரீதியாகவும் இவற்றின் இயக்கத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் விளக்கினார். திருட்டு சிடிக்கள் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால், அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

திருட்டு சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துபவர் ஒருவரைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழித்து, ஹார்ட்வேரை மாற்றி அமைக்க வேண்டிய துள்ளது என்றும், இந்நிலையில் மேலும் அதிக பணம் கொடுக்காமல் சாப்ட்வேர் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள் என்று கூறினார். 

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வேண்டுமானால் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்கட்டும்; நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறினார். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கேற்ப சாப்ட்வேர் தொகுப்பிற்கு விலை வைக்க வேண்டும் என அவருடைய ஆதங்கத்தினை வெளிப் படுத்தினார். 

இந்நிலையில் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. வெளிநாட்டி லிருந்து பேக்கேஜ்டு சாப்ட்வேராக இறக்குமதி செய்தால், இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. 

இதனால் அதிகார பூர்வமான விண்டோஸ் 7 சாப்ட்வேர் கிடைப்பது தாமதமாகிக் கொண்டு வருகிறது என்று கூறினார். திருட்டு சாப்ட்வேர் வாங்காதீர்கள். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படும்
Related Posts with Thumbnails