விஸ்டாவில் அலாரம் கீ

விஸ்டாவில் Start, Control Panel சென்று அங்கு Ease of Access என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். எக்ஸ்பியில் உள்ள Accessibility Options போன்றதுதான் இது.

அங்கே "Change how your keyboard works" என்ற லிங்க்கினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோ சென்றவுடன் அங்குள்ள பக்கத்தின் நடுப்பாகத்தினைப் பார்க்கவும். அங்கு "Turn on Toggle Keysஎன்றுள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

இதனை ஆக்டிவேட் செய்துவிட்டதனால் நீங்கள் எப்போது கேப்ஸ் லாக் கீயினை அழுத்தினாலும் அப்போது பீப் என ஓர் ஒலி கேட்கும். இதே சத்தம் நம்பர் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் கீகளை அழுத்தினாலும் கேட்கும். இது நல்லதுதான்.

இந்த கீகள் தான் நாம் நம்மை அறியாமலேயே அழுத்தி அதனால் தேவையற்றவற்றை டைப் செய்திடத் தோன்றும்.


சில வேளைகளில் இந்த கீயினை அழுத்தியே நாம் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக டெக்ஸ்ட்டை கேப்பிடல் எழுத்துக்களில் அமைக்க வேண்டியதிருக்கும்.


அந்த வேளைகளில் கேப்ஸ் லாக் அழுத்திய பின்னர் டைப் செய்திடலாம். அது போன்ற வேளைகளில் இந்த சத்தம் நமக்கு இடையூறாக இருக்காது. இந்த சத்தம் நமக்கு சிறிய எச்சரிக்கை தான். வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம். அல்லது எடுத்துவிடலாம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails