மிகச் சிறந்த பேட்டரியுடனும் நல்ல கட்டமைப்புடனும் சாம்சங் நிறுவனம் அண்மையில் NPNC10 என்ற புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
நெட்புக் தயாரித்து வழங்கும் பிரிவில் லேட்டாக நுழைந்தாலும் சிறப்பாக இயங்கும் நெட்புக்குகளை சாம்சங் வழங்கி வருகிறது.
அனைத்து நெட்புக்குகளிலும் இன்டெல் நிறுவனத்தின் ஆட்டம் (Atom) ப்ராசசர் இருந்தாலும் மற்ற செயல்திறன்களிலும் கட்டமைப்பிலும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.
இந்த பிராசசருடன் Intel 945GSE சிப்செட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 1.60 எஏத் ஆக உள்ளது. 1 ஜிபி ராம், 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆன் போர்ட் இன்டெல் ஜி.எம்.ஏ. 950 ஜி.பி.யு. இணைக்கப்பட்டுள்ளது.
இதன் 10.2 அங்குல திரையுடன் 1.3 மெகா பிக்ஸெல் கொண்ட வெப்கேம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ கால்களையும் மெசேஜ்களையும் எளிதாக அனுப்பலாம்.
திரை ரெசல்யூசன் 1024 x 600. வழக்கமான அலுவலகப் பணிகள், அவ்வப்போது சிறிய அளவில் சினிமா மற்றும் கேம்ஸ் விளையாட்டு ஆகியவற்றிற்கு இந்த திரை சரியாக உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 10/100 Ethernet, WiFi b/g and Bluetooth ஆகியவை தரப்பட்டுள்ளன. WiFi b/g க்குப் பதிலாக WiFi/nஐ சாம்சங் வழங்கி இருந்திருக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் பெரிய கொள்ளளவில் இருப்பதால் இன்னும் வேகமான டவுண்லோடை இதன் மூலம் பெற்றிருக்கலாம்.
மேலும் ஒரு விஜிஏ மற்றும் 3 யு.எஸ்.பி. போர்ட்கள் தரப்பட்டுள்ளன. மேக் அபி வைரஸ் ஸ்கேன் தரப்படுகிறது. எக்ஸ்பிக்கான சாம்சங் ரெகவரி சொல்யூசன் கூடுதல் வசதியாகத் தரப்பட்டிருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது.
இதன் கட்டமைப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். அனைத்தும் சாலிட் கலரில் உள்ளன. கீகள் எளிமையாகவும் விரைவாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் டச் பேட் மற்ற நெட்புக்குகளில் உள்ளதைக் காட்டிலும் சற்று சிறியது என்றாலும் வசதியாக உள்ளது. ஸ்குரோல் செய்திட தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 28,477 எனத் தரப்பட்டுள்ளது.
1 comments:
நண்பரே வணக்கம்.
எனக்கு 15ஆயிரத்திற்குள் ஒரு நெட்புக் தேவைப்படுகிறது.கிடைக்குமா?எனக்காக சற்று தேடி அந்த நெட்புக்கின் விபரத்தினை tvetsi@gmail.com மிற்கு அனுப்பமுடியுமா?
Post a Comment