ஆப்பிள் நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஸ்நோ லியோபர்ட் வெளியிட்டது. கடந்த மூன்று மாதங்களாக இந்த சிஸ்டம் செயல்பாட்டில் உள்ளது.
விண்டோஸ் 7 வெளியாகி இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்நோ லியோபர்ட் சிஸ்டத்தைக் காட்டிலும் அதிக அளவில் விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுகிறது.
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. இது கொண்டிருக்கும் பங்கு 92.52% ஆகும். மேக் சிஸ்டம் 5.27%. லினக்ஸ் 0.96%. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் 1.25% பங்கைக் கொண்டிருக்கின்றன.
விண்டோஸ் சிஸ்டங்களைப் பொறுத்தவரை விண்டோஸ் 7 2.15%, விஸ்டா 18.83%, எக்ஸ்பி 70.48% என்ற அளவில் இயங்குகின்றன
0 comments:
Post a Comment