ரூ. 109 கட்டணத்தில் எம்டிஎன்எல்-லின் 3 ஜி சேவை

அரசுத் துறை நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனம் ரூ. 109 கட்டணத்தில் 3-ஜி சேவையை அளிக்க முன்வந்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கவில்லை. இதற்கான ஏல நடைமுறை தொடங்கவில்லை.

இந்நிலையில் அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வசதியாக எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு 3-ஜி சேவை அளிப்பதற்கான அலைக்கற்றை ஏற்கெனவே ஒதுக்கப்பட்டது.

இது தவிர, கூடுதல் தேவைக்கு இவ்விரு நிறுவனங்களும் டெண்டர் முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசிடமிருந்து பெற்றுள்ள அலைக்கற்றை வசதி மூலம் எம்டிஎன்எல் நிறுவனம் இப்புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்போனில் குரல் பதிவு மற்றும் விடியோ அழைப்புக்கு நிமிடத்துக்கு 20 காசு கட்டணம் செலுத்தினால் போதுமானது.

அத்துடன் அதிவேக இணையதள வசதியைப் பெறலாம். "ஜாடூ' என்ற பிராண்டுப் பெயரில் தில்லி மற்றும் மும்பையில் 3-ஜி சேவையை எம்டிஎன்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக இந்த சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 25 நிமிஷம் விடியோ அழைப்பு இலவசமாக அளிக்கப்படும். அத்துடன் 25 எம்பி தகவல் பதிவு ரூ. 25-மதிப்புக்கு இலவசமாக பேசும் வசதி உள்ளிட்டவை அறிமுக சலுகையாக இந்நிறுவனம் வழங்குகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails