ஊழல் : இந்தியாவுக்கு 84வது இடம்

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் ஊழல் பட்டியலில் இந்தியா 84வது இடத்தை வகிக்கிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம் சமீபத்தில் 180 நாடுகளில் ஆய்வு மேற் கொண்டது.

ஊழல் இல்லாத நாடுகளாக சிங்கப்பூர், நியூசிலாந்து,டென்மார்க் ஆகிய நாடுகளும், ஊழல் நிறைந்த நாடுகளாக ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2004ம் ஆண்டு 146 நாடுகளில் நடந்த ஆய்வில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.


தற்போதைய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் உள்ளது. பொதுத்துறை மற்றும் அரசு துறைகளில் தான் இந்தியாவில் அதிக ஊழல் நடப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


நேபாளம் 143வது இடத்திலும், பாகிஸ்தான் 139வது இடத்திலும், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் 97வது இடத்திலும் உள்ளன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails