விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் டிபால்ட்டாக சில போல்டர்கள் உருவாக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் மை மியூசிக் (My Music) போல்டரும் ஒன்று.
இந்த போல்டரில் தான் நீங்கள் இன்டர்நெட்டில் இறக்கும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் தாமாக சேவ் செய்யப்படும். நீங்கள் இறக்கப்படும் ஆடியோ பைல் குறிப்பிட்ட டைரக்டரியில் இறங்க வேண்டும் என்றால் நீங்களாக அதனை மாற்ற வேண்டும்.
விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கி பின் சேவ் செய்தாலும் அது மை மியூசிக் போல்டரில் தான் பதியப்படும். மை பிக்சர்ஸ் போல்டரைப் போல இதுவும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரின் ஒரு பகுதியாகும்.
மை மியூசிக் போல்டர் திறக்க நீங்கள் மை டாகுமெண்ட்ஸ் போல்டரைத் திறக்க வேண்டியதில்லை. ஸ்டார்ட் பட்டனை அழுத்துங்கள். கிடைக்கும் ஸ்டார்ட் பாப் அப் மெனுவில் வலது பக்கம் இருக்கும் பிரிவில் இது மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோ இருக்கும்.
மை டாகுமென்ட்ஸ் போல்டர் திறந்தும் அதில் உள்ள மை மியூசிக் மீது கிளிக் செய்தும் இந்த போல்டரைத் திறக்கலாம். மை பிக்சர்ஸ் போல்டர் போல மை மியூசிக் போல்டரும் தம்ப் நெயில் பார்மட்டில் காணப்படும்.
மை மியூசிக் போல்டரில் சேவ் செய்யப்பட்ட ஒரு ஆடியோ பைலை இயக்க அதன் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் கடூச்தூ என்பதில் கிளிக் செய்திடவும். உடன் அந்த ஆடியோ பைல் விண்டோஸ் மீடியா பிளேயரில் இசைக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட போல்டரில் உள்ள ஆடியோ பைல்கள் அனைத்தையும் இயக்க மை மியூசிக் போல்டரில் உள்ள மல்ட்டி டாஸ்க் என்னும் செக்ஷனில் உள்ள Play All ஹைப்பர் லிங்க்கை கிளிக் செய்திடும் முன் போல்டர் ஐகானைக் கிளிக் செய்திடவும்.
மை மியூசிக் போல்டரில் உள்ள அனைத்து ஆடியோ பைல்களையும் இயக்க பிளே ஆல் ஹைப்பர் லிங்க் கிளிக் செய்திடும் முன் வேறு எந்த போல்டரும் பைலும் செலக்ட் ஆகவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்
0 comments:
Post a Comment