மூளைக்கு தீனி போடும் அறிவியல் சமாச்சாரங்கள்

நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? 

பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது? இரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது?

இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது? பல இணைய தளங்கள் இருந்தாலும்,http://www.exploratorium.edu/ snacks/index.html என்ற முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. 

இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனும் தரப்பட்டுள்ளன.

தளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில், மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. 

இது தான் இந்த தளத்தின் சிறப்பு. Instructions, Advice, and Helpful hints  என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.

தளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az  என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. 

இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம், நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு தளமாகும்

ஐ.பி.முகவரிக்குத் தட்டுப்பாடு

சென்ற 1980 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் முகவரிகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகவரிகள், ஒரு பொதுவான கட்டமைப்பில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

இந்த கட்டமைப்புIpv4 (Internet Protocol version 4) என அழைக்கப்பட்டு வந்தது. இவற்றை வரையறை செய்து, பெயர் வழங்கும் பணியை, பன்னாட்டு அமைப்பான ICANNமேற்பார்வையிட்டு வருகிறது. 

பெயர் வழங்குவதற்கான இந்த Ipv4 கட்டமைப்பு சில நூறு கோடிகள் முகவரியினை அமைக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில மாதங்களில் இதனால் வழங்க முடியாத அளவிற்குத் தேவைப்படும் ஐ.பி. முகவரிகள் எண்ணிக்கை உயரும். 

சாத்தியப்படக் கூடிய எண்ணிக்கையில், இன்னும் 4% அல்லது 5% தான் மீதம் உள்ளது. கம்ப்யூட்டர்கள் மட்டுமின்றி, தற்போது, டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், வீடியோ கேம் சாதனங்கள் நேரடியாக இன்டர்நெட்டில் இணைக்கப்படுவதால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐ.பி. முகவரி தரப்பட வேண்டியுள்ளது. மேலும் எப்போதும் இன்டர்நெட்டில் இணைந்திருக்கும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக மொபைல் போன்களை இங்கு குறிப்பிடலாம். புஷ் மெயில் போன்ற வசதிகள் பெற இவையும் தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றன. இவற்றிற்கும் நிரந்தர முகவரி தேவைப்படுகிறது. எப்போதும் இணைப்பில் இருக்கும் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே தான் இந்த தட்டுப்பாடு. 

தற்போதைக்கு இந்த தட்டுப்பாடு, ஓரளவிற்குச் சமாளிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர முகவரிக்குப் பதிலாகப் பல இடங்களில் தற்காலிக முகவரிகள் தரப்படுகின்றன. ஆனால் இது நிரந்தர தீர்வாகாது. 

இவற்றை எதிர்பார்த்தே, இன்டர்நெட் பொறியியல் வல்லுநர்கள், Ipv4 கட்டமைப்பிற்குப் பதிலாக, Ipv6 (Internet Protocol version 6)என்னும் கட்டமைப்பினைத் தற்போது உருவாக்கியுள்ளனர். இதன் தொடக்க உருவாக்கம் 1998 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இது 128 பிட்களில் அமைக்கப்படுவதால், ட்ரில்லியன் கணக்கில், ஐ.பி. முகவரிகளை அமைக்க முடியும். 

Ipv4 கட்டமைப்பு 32 பிட்களில் இயங்கக் கூடியது. எனவே 2 to the power of 32 என்ற கணக்கின்படி, 400 கோடி முகவரிகளே அமைக்க முடியும். தொடக்கக் காலத்தில் இது போதும் என்று திட்டமிடப்பட்டது. இன்டர்நெட் இந்த அளவிற்கு விரியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஆனால், சுதாரித்துக் கொண்ட இன்டர்நெட் வல்லுநர்கள், 1998 ஆம் ஆண்டு முதல் புதிய Ipv6 கட்டமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டமைப்பிலேயே, நெட்வொர்க் பாதுகாப்பிற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

புதிய கட்டமைப்பில், தகவல் தொகுப்பு என்று அழைக்கப்படுகின்ற இன்டர்நெட் பாக்கெட் பார்மட்டின் வடிவமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒரு தகவல் பாக்கெட்டினை, ஒரே நேரத்தில் பல ஐ.பி. முகவரிகளுக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தினை இதில் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த வகையில், ஒரு பாக்கெட் ஹெடர் மிக எளிதாக அமைந்திருக்கும். இது இன்டர்நெட் செயல்பாட்டின் வேகத்தினை இன்னும் அதிகமாக்கும். 

Ipv6  இயக்கம் 128 பிட் என்பதால், ஐ.பி. அட்ரஸ் அமைக்க, நிறைய ஸ்பேஸ் கிடைக்கிறது. ஸ்பேஸ் அதிகம் என்பதால், ஐ.பி. முகவரிகளைப் பலப்பல வகைகளில் அமைக்க முடியும். இதனைப் பயன்படுத்தி 2 to the power of 128 முகவரிகள் அமைக்க முடியும். இது ஏறத்தாழ 3.4×10 to the power of 36 முகவரிகள் ஆக இவை இருக்கும். 

மேலும் இதில் கூடுதல் பாதுகாப்பினையும், இயக்கத்தில் வேகத்தையும், எளிமையையும் வழங்க முடியும். இந்த நடைமுறை புழக்கத்தில் வருகையில், பழைய நடைமுறையும் சேர்ந்தே இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த கண்டுபிடிப்பிற்கும் தேவை தான் அடிப்படை என்று ஒரு பழமொழி உண்டு. அது இங்கு உண்மையாகி உள்ளது.

உயிரை பறித்த "மிஸ்டுகால்'

வால்பாறை அருகே "மிஸ்டுகால்' பிரச்னையால் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்க வந்த போலீசாரை மக்கள் முற்றுகையிட்டனர்.

வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை இடது கரையை சேர்ந்தவர் தெய்வானை. இவரது மகன் பரமசிவன்(16). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது மொபைல்போனிலிருந்து ஒரு பெண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தார் அவனிடம் கேட்டதற்கு முறையான முகவரி சொல்லாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனிடையே வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 26ம் தேதி சேடல்டேமில் உள்ள பரமசிவனின் வீடு புகுந்து தாக்கியதாகவும், தடுக்க வந்த அவரது தாயாரையும் தாக்கியுள்ளதாக கூறப் படுகிறது.

கண் எதிரே தன்னால் தாய் தாக்கப்பட்டதால் மனம் உடைந்த போன பரமசிவன், நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரது உடலை மீட்க சென்ற முடீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசாரை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் தான் பிணத்தை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று அதிகாலை வால்பாறை இன்ஸ்பெக்டர் சண்முகையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனை தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

இதையடுத்து நேற்று அதிகாலை 5.00 மணிக்கு மாணவரது உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.பரமசிவத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த, ராதாகிருஷ்ணன், சரவணபாண்டியன், ரவி, காளிமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிளாக்கரில் சர்ச் இன்ஜினை (Search Engine) உருவாக்க

இந்த பதிவில் உங்கள்  பிளாக்கரில் சர்ச் இன்ஜினை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றிப் பார்ப்போம் .


இந்த சர்ச் இஞ்சின் உங்கள் பிளாக்கில் பதிவிடப்படும் பதிவுகளை மட்டும் தேட உதவுகிறது. இதனால் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர் உங்கள் தளத்திலேயே அவருக்கு தேவையான பதிவு இருக்கிறதா?இல்லையா?என்று அறிந்து கொள்ள உதவுகிறது.

இப்பொழுது அதை எப்படி உருவாக்குவது  என்பது பற்றி பார்ப்போம்..

உங்களுடைய பிளாக்கர் கணக்கில் உள்ளே நுழைந்து  Dashboard --> Layout --> Page Elements தேர்வு செய்யவும் .பின்பு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்யவும்.

<form action="http://yourblogname.blogspot.com/search" method="get"> 

<input class="textinput" name="q" size="30" type="text"/> 

<input value="search" class="buttonsubmit" name="submit" type="submit"/>

</form> 


இதில் http://yourblogname.blogspot.com என்பதற்குப்  பதிலாக உங்களுடைய தள முகவரியை அளிக்கவும்.

சிம்ப்ளி ரிலையன்ஸ் புதிய கட்டணத் திட்டங்கள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்னுடைய சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களுக்கு, புதிய இரு திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை Simply Unlimited என அழைக்கிறது. இதில் முதல் திட்டத்தின்படி மாதம் ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், எந்த லோக்கல் ரிலையன்ஸ் போனுக்கும், மற்றும் வேறு லோக்கல் நெட்வொர்க் போன்களுக்கும், இலவசமாகப் பேசலாம்.

லோக்கல் அல்லாமல், மற்ற அழைப்புகளுக்கு, அவை மற்ற நெட்வொர்க்குகளில் இயங்கினாலும், ஒரு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்படும். இதனை சி.டி.எம்.ஏ. லோக்கல் பேக் என ரிலையன்ஸ் பெயரிட்டுள்ளது.

சி.டி.எம்.ஏ. நேஷனல் பேக் என்ற இன்னொரு திட்டத்தில், மாதம் ரூ.599 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், இந்தியா முழுவதும் உள்ள, எந்த ரிலையன்ஸ் போனுக்கும், ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., மற்றும் லேண்ட்லைன் ஆகிய எதற்கும் கட்டணம் இன்றி பேசலாம். இந்தியாவில் இயங்கும் மற்ற நெட்வொர்க் போன்களுக்கும் இலவசமாகவே பேசலாம்.

இந்த திட்டம், மிக அதிகமான அளவில் போன் அழைப்புகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வர்த்தக ரீதியாக, போன்களைப் பயன்படுத்துவோருக்கு இல்லை.

இந்த இரண்டு திட்டத்திலும், இலவச அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மாதம் 900 நிமிடங்கள் பயன்படுத்தலாம். அதற்கும் மேலாகப் பயன்படுத்தினால், நிமிடத்திற்கு 50 பைசா கட்டணமாகும்.

விண்டோஸ் இயக்கத்தில் ஹாட் கீகள்

விண்டோஸ் இயக்கமும் சரி, அதில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும் சரி, நமக்கு பல வகையான ஷார்ட் கட் கீகளைத் தருகின்றன.

இவை அதிலேயே புரோகிராம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புரோகிராம்களை இயக்க, நாம் விரும்பும் போல்டர்களைத் திறக்க, பாடல் பைலை இயக்கி ரசிக்க என நம் விருப்பப்படி கம்ப்யூட்டரில் செயல்பட ஹாட் ஷார்ட் கட் கீகள் இருந்தால், எப்படி இருக்கும்.

நினைக்கவே சுகமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறதா! அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா!

அதன் பெயர் Clavier. இதனைhttp://utilfr42.free.fr/util/Clavier.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கீ போர்டில் உள்ள எந்த கீயையும், விண்டோஸ் கீ உட்பட, பயன்படுத்தி ஹாட் ஷார்ட் கட் கீகளை உருவாக்க உதவுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி, புரோகிராம்களை இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் + டபிள்யூ கீயினை அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கும்படி அமைக்கலாம். இதே போல எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் அமைக்கலாம்.

அல்லது ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை ஒரு ஷார்ட் கட் கீயில் வைத்து, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் கொண்டு வரலாம். உங்கள் இமெயில் அட்ரஸ் மிகப் பெரிதா? சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா!

அப்படியானல் அதனையும் ஒரு ஹாட் ஷார்ட் கட் கீயில் வைத்துவிடலாம். இவ்வாறு அமைக்கும் ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும், வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என அனைத்திலும் இயங்கும்.

போல்டர், இமேஜ், பைல், வீடியோ, ஆடியோ பைல் என எதனை இயக்க வேண்டும் என்றாலும், ஹாட் கீ அமைத்துவிடலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கி, இசையை ரசிப்பவரா நீங்கள்! விண்டோஸ் கீ + எம் கீ அல்லது வெறும் எம் கீ மட்டும் அழுத்திக் கூட விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குமாறு அமைக்கலாம்.

உங்களுக்கான ஷார்ட் கட் ஹாட் கீயினை அமைக்க, கிளேவியர் புரோகிராமை இயக்கி, அதில் ஊதா வண்ணத்தில் உள்ள "+" ஐகானைக் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் போல்டருக்கான பாத் (டைரக்டரி வழி) ஐ இதனுடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா! அந்த ஸ்பெஷல் கேரக்டரை ஒரு ஹாட் கீயில் கொண்டு வரலாம்.

கிளேவியர் புரோகிராமில் யு.ஆர்.எல். லான்ச்சர் என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தள முகவரிகளை, ஹாட் கீயில் அமைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இணைய தளத்தில் நீங்கள் நிரப்ப வேண்டிய தகவல்களுக்கு ஹாட் கீ அமைத்து வைத்தால், படிவங்களில் விரைவாக தகவல்களை நிரப்பி விடலாம்.

கேப்ஸ் லாக், நம் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் போன்றவை, விண்டோஸ் இயக்கத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதனயும் கிளேவியர் புரோகிராமில் செட் செய்திடலாம்.

நீங்கள் இவ்வாறு பல ஹாட் கீகளை அமைத்து விட்டால், எந்த கீ தொகுப்பு எதற்கு என்பது மறந்துவிடும் அல்லவா! கிளேவியர் புரோகிராமிலேயே ஒரு பேனல் ஒன்று உருவாக்கி, அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹாட் கீகளையும் போட்டு வைக்கலாம். நாம் ஒன்றிரண்டு கீகளை மறக்கும் நிலையில் இந்த பேனல்களில் அவற்றைக் காணலாம். அவசியம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது.

இந்தியாவில் வெளியானது ஆபீஸ் 2010

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் 2010, ஷேர்பாய்ண்ட் 2010, விசியோ 2010 மற்றும் ப்ராஜக்ட் 2010 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

எந்த நேரத்திலும், எந்த வகையிலும், வணிக ஆவணங்கள் தயாரிப்பு, அலுவலகப் பயன்பாடு ஆகியவற்றிற்கு, மக்கள் பழக்கப்பட்ட வகையில், கூடுதல் பயன் அளிக்கும் விதமாக அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தரத் திட்டமிட்டு இவற்றை வடிவமைத்து வெளியிட்டதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆபீஸ் 2010 சார்ந்த தயாரிப்புகள் அனைத்தும், வர்த்தக நிறுவனங்களுக்கு சிக்கனத்தை ஏற்படுத்துவதாகவும், புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, நிறுவனங்களை மென்மேலும் வளர்ப்பதற்குத் தேவையான கூறுகளை உள்ளடக்கியதாக இருப்பதாகவும் இந்த தொகுப்புகள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் ரவி வெங்கடேசன் தெரிவித்தார்.

இவற்றுடன் ஆபீஸ் மொபைல் 2010 தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் 6.5 இயக்கத் தொகுப்பு இயங்கும் மொபைல் போன்கள், நோக்கியா ஸ்மார்ட் வகை மொபைல்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இ–சிரீஸ் வகை மொபைல்களில் இந்த தொகுப்பு அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப் படும்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொகுப்புகள், சில்லரை விற்பனையாக, மக்களுக்கு வரும் ஜூன் இரண்டாம் வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல்போனில் பேஸ்புக்

செல்போனில் பேஸ்புக் சேவையை வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.​ ​

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்கும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீடியோகான் மொபைல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி சுனீல் டான்டன் தெரிவித்துள்ளார்.​


இதன்படி ​பேஸ்புக்.காம் எனும் இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள்,​​ உறவினர்களுடன் உரையாடலாம்.​ விரைவாக உரையாடுவதற்காக இதில் படங்கள்,​​ கிராபிக்ஸ் எதுவும் இருக்காது.​ இது இலவச சேவையாகும்.

இதேபோல ரிலையன்ஸ் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய சேவையை அளித்துள்ளது.​

பேஸ்புக் இணையதளம் மூலம் சமூக வலைத்தளத்துடன் தொடர்பு கொள்வதற்கு கட்டணம் கிடையாது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு பிரிவின் தலைவர் அனில் பாண்டே தெரிவித்தார்.​

ஜெயிக்கப்போவது யார்?

இன்டர்நெட் தேடலுக்கு அடிப்படையான பிரவுசர்கள் அனைத்தும் இலவசமாக இன்று கிடைக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இயங்குவது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசராகும். அடுத்து மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இடம் பெறுகிறது.


ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரோம் பிரவுசர், வெகு சீக்கிரம் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்று பலரும் கணக்கிடுகின்றனர். இதற்கென அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். காரணங்களைப் பார்க்கும் முன் இன்றைய பிரவுசர் சந்தை நிலை குறித்த சில தகவல்களைக் காணலாம்.


சென்ற ஏப்ரல் மாதத்துடன் முடிந்த ஆய்வுக் கணக்கின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பிரவுசர் வாடிக்கையாளர்களில் 80% பேரைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஏப்ரல் இறுதியில் 59.95% க்கு இறங்கியுள்ளது. குரோம் பிரவுசர் 6.7% கொண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமான உயர்வு 0.6% ஆகும்.


இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கை இல்லை என்றாலும், இதுவரை குரோம் பெற்ற கூடுதல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் கொண்ட கூடுதல் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பயர்பாக்ஸ் தற்போது 25% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.


ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். இதனைத் தவிர்த்தவர்கள் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசருக்கு மாறி உள்ளனர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை எனப் பலரும் கருதுகின்றனர்.


1. வேகம்:


கூகுள் தரும் குரோம் பிரவுசர், இன்டர்நெட் தளங்களைக் கொண்டு வருவதில் பேய் வேகத்தைக் கொண்டுள்ளது என்று கூறலாம். ஆப்பிள் சபாரி, ஆப்பரா, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய அனைத்துடன், குரோம் பிரவுசரின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.


2. எளிமை:


அடுத்ததாக, குரோம் பிரவுசர் தரும் எளிமையான கட்டமைப்பு. கூகுள் தரும் மற்ற அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளைப் போல, இந்த பிரவுசர் மிக எளிமையான முறையில் மெனுக்களைக் கொண்டு இயங்குகிறது.


மற்ற பிரவுசர்களில் காணப்படும் பலவகையான, குழப்பத்தில் ஆழ்த்தும் மெனுக்கள், குரோம் பிரவுசரில் இல்லை. ஆனால் இதுவே சிலரை குரோம் பிரவுசரிலிருந்து, மீண்டும் மற்ற பழைய பிரவுசர்களுக்குத் தாவ வைத்துள்ளது.


இருப்பினும் குறைவான, ஆனால் அடிப்படைத் தேவைகளைத் தரும் வகையில், மெனுக்களை விரும்புபவர்களும் பலர் உள்ளனர். இந்த வகையில் குரோம் பிரவுசர் பலரின் விருப்ப பிரவுசராக மாறி உள்ளது.


3. சிறந்த பாதுகாப்பு:


இன்டர்நெட் பிரவுசர் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதற்குக் காரணம், முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாததுதான். குரோம் பிரவுசர் வரும் முன்னர், இந்த காரணத்தி னாலேயே, பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலிருந்து, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினார்கள்.


ஆனால் குரோம் வந்தவுடன், அது தரும் பாதுகாப்பு அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஹேக்கர்கள் எந்தவிதத்திலும் உள்ளே நுழைய முடியாத வகையில், குரோம் பிரவுசர் கட்டமைப்பு உள்ளது.


ஆனாலும், இன்டர்நெட் சந்தையில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள், இதன் மீது தங்கள் கவனத்தைத் திருப்பவில்லை என்றும் ஒரு சாரார சொல்லுகின்றனர்.


அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனைப் பயன்படுத்த முயற்சிக்கையில், வைரஸ் மற்றும் மால்வேர் களைப் பரப்புபவர்கள், நிச்சயம் குரோம் கட்டமைப்பினையும் உடைப்பார்கள் என்று பலரும் கருதுகின்றனர். இருப்பினும் இன்றைய நிலையில் கூடுதல் பாதுகாப்புள்ளது குரோம் பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


4. பழைய சிஸ்டத்திலும் இயங்கும்:


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பழைய தொகுப்புகளிலும், குரோம் பிரவுசர் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியில் இது நன்றாக இயங்குகிறது. எனவே இதற்கு மாறும் பழைய கம்ப்யூட்டர் பயனாளர்கள், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை.


பிரவுசர் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வேகம் மற்றும் எளிமை என்ற இரு காரணங்களினால், குரோம் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. சில ஆண்டுகளில், குரோம் முதல் இடத்திற்கு உயர்ந்து விடும் என்றே பலரும் கணிக்கின்றனர். காத்திருந்து பார்க்கலாம்.

Related Posts with Thumbnails