சிம்ப்ளி ரிலையன்ஸ் புதிய கட்டணத் திட்டங்கள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்னுடைய சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களுக்கு, புதிய இரு திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை Simply Unlimited என அழைக்கிறது. இதில் முதல் திட்டத்தின்படி மாதம் ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், எந்த லோக்கல் ரிலையன்ஸ் போனுக்கும், மற்றும் வேறு லோக்கல் நெட்வொர்க் போன்களுக்கும், இலவசமாகப் பேசலாம்.

லோக்கல் அல்லாமல், மற்ற அழைப்புகளுக்கு, அவை மற்ற நெட்வொர்க்குகளில் இயங்கினாலும், ஒரு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்படும். இதனை சி.டி.எம்.ஏ. லோக்கல் பேக் என ரிலையன்ஸ் பெயரிட்டுள்ளது.

சி.டி.எம்.ஏ. நேஷனல் பேக் என்ற இன்னொரு திட்டத்தில், மாதம் ரூ.599 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், இந்தியா முழுவதும் உள்ள, எந்த ரிலையன்ஸ் போனுக்கும், ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., மற்றும் லேண்ட்லைன் ஆகிய எதற்கும் கட்டணம் இன்றி பேசலாம். இந்தியாவில் இயங்கும் மற்ற நெட்வொர்க் போன்களுக்கும் இலவசமாகவே பேசலாம்.

இந்த திட்டம், மிக அதிகமான அளவில் போன் அழைப்புகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வர்த்தக ரீதியாக, போன்களைப் பயன்படுத்துவோருக்கு இல்லை.

இந்த இரண்டு திட்டத்திலும், இலவச அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மாதம் 900 நிமிடங்கள் பயன்படுத்தலாம். அதற்கும் மேலாகப் பயன்படுத்தினால், நிமிடத்திற்கு 50 பைசா கட்டணமாகும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails