எல்.ஜி.தரும் புதிய மொபைல்கள்

அண்மையில் எல். ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், வேறுபட்ட விலைகளில், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில், சில மொபைல்களை வெளியிட்டுள்ளது.

இவை தரும் வசதிகளும், இவற்றின் விலையும், இந்நிறுவனம் மொபைல் விற்பனைச் சந்தையில் தன் இடத்தை மேலும் அதிகப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளாகவே தெரிகின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.


1.எல்.ஜி. ஜி.டி.510 குக்கி பெப்: சிறிய அழகான வடிவத்தில், 3 அங்குல டச் ஸ்கிரீன் திரையுடன் வெளிவந்துள்ள இந்த பார் டைப் மொபைல் பல திறன்களைக் கொண்டு கூடுதல் வசதிகள் தருவதாக உள்ளது. யாரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இதன் இன்டர்பேஸ் அமைந்துள்ளது.

3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, வெப் பிரவுசர் மற்றும் யாவரும் பயன்படுத்தும் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கான இணைப்பு ஆகியவை இதில் தரப்பட்டுள்ளன. இதன் மெமரி 42 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். சில்வர் மற்றும் கருப்பு வண்ணங்களில் இது கிடைக்கிறது.

டிஜிட்டல் ஸூம் கொண்ட இதன் கேமராவினைப் பயன்படுத்தி, வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளே மேற்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன.

எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ ரேடியோ, A2DP இணைந்த புளுடூத், மொபைல் ட்ரேக்கர் வசதி, நான்கு பேண்ட் அலைவரிசையில் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் செயல்படும் திறன், இன்டர்நெட் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் பரிமாணம் 97.8 x 49.5 x 11.2 மிமீ என்ற வகையில் அமைந்துள்ளது. எடை 87 கிராம். இதன் குறியீட்டு விலை ரூ. 6,971.


2. எல்.ஜி. ஜி.டபிள்யூ 550:

முதலில் குறிப்பிட்ட போனைக் காட்டிலும் சற்று கூடுதலான விலையில் இந்த போன் சந்தையில் கிடைக்கிறது. இது ஒரு கேண்டிபார் போன். குவெர்ட்டி கீ போர்ட் கொண்டது. 2.4 அங்குல வண்ணத்திரை, 3.2 எம்பி திறன் கொண்ட கேமரா, ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள், நெட்வொர்க் இணைக்க HSDPA 7.2Mbps இணைப்பு, 1300mAh பேட்டரி கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்கு பேண்ட் அலை வரிசைகளில் உலகளாவிய 3ஜி போனாக இயங்கக் கூடியது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. டிஜிட்டல் ஸூம் கொண்ட கேமரா 3 எம்பி திறனுடன் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளே வசதி கொண்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், பல பார்மட் ஆடியோ பைல்களை இயக்கக் கூடிய எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, மொபைல் ட்ரேக்கர், A2DP இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளது.

நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கக் கூடிய இந்த மொபைலில் விண்டோஸ் மொபைல் 6.5 சிஸ்டம் தரப்பட்டுள்ளது. வை–பி, 3ஜி நெட்வொர்க் இணைப்பு வசதி கிடைக்கிறது. இதன் பரிமாணம் 116 x 62 x 12 மிமீ ஆக உள்ளது. எடை 125.5. கிராம். இந்த போனின் குறியீட்டு விலை ரூ. 12,115.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails