ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டு

இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப்பட்ட பணத்தில், கள்ள நோட்டு இருந்தது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழரசு. இவர், மதுராந்தகம் மற்றும் கூவத்தூர் இந்தியன் வங்கி கிளையில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 5ம் தேதி மதுராந்தகம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில், ஒரு கார்டு மூலம் 20 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கார்டு மூலம் 3 ஆயிரம் ரூபாயும் பணம் எடுத்தார்.


அதில், 21 ஆயிரம் ரூபாயை மதுராந்தகம் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் செலுத்தினார். அங்கு பணத்தை பெற்றுக்கொண்ட கேஷியர், இயந்திரம் மூலம் பரிசோதித்த போது, ஒரு 500 ரூபாய் நோட்டு (எண். 9 பி பி 625217 ) கள்ள நோட்டு என்றார்.


இதையடுத்து செந்தமிழரசு, மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். வங்கி மேலாளரிடம் கூறியபோது, 'இதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது' என கூறினார். பின்னர் கள்ள நோட்டை பெற்றுக் கொண்டு, வேறு 500 ரூபாய் நோட்டை கொடுத்தார்.


வங்கிகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரம் இருந்தும், ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டு வந்தது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 comments:

ப.கந்தசாமி said...

பூசாரி தப்பு செஞ்சா சாமிகிட்ட முறையிடலாம், சாமியே தப்பு செஞ்சா யாருகிட்ட முறையிடறது?

Post a Comment

Related Posts with Thumbnails