சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆபீஸ் 2010, ஷேர்பாய்ண்ட் 2010, விசியோ 2010 மற்றும் ப்ராஜக்ட் 2010 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
எந்த நேரத்திலும், எந்த வகையிலும், வணிக ஆவணங்கள் தயாரிப்பு, அலுவலகப் பயன்பாடு ஆகியவற்றிற்கு, மக்கள் பழக்கப்பட்ட வகையில், கூடுதல் பயன் அளிக்கும் விதமாக அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தரத் திட்டமிட்டு இவற்றை வடிவமைத்து வெளியிட்டதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
ஆபீஸ் 2010 சார்ந்த தயாரிப்புகள் அனைத்தும், வர்த்தக நிறுவனங்களுக்கு சிக்கனத்தை ஏற்படுத்துவதாகவும், புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, நிறுவனங்களை மென்மேலும் வளர்ப்பதற்குத் தேவையான கூறுகளை உள்ளடக்கியதாக இருப்பதாகவும் இந்த தொகுப்புகள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் ரவி வெங்கடேசன் தெரிவித்தார்.
இவற்றுடன் ஆபீஸ் மொபைல் 2010 தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் 6.5 இயக்கத் தொகுப்பு இயங்கும் மொபைல் போன்கள், நோக்கியா ஸ்மார்ட் வகை மொபைல்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இ–சிரீஸ் வகை மொபைல்களில் இந்த தொகுப்பு அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப் படும்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொகுப்புகள், சில்லரை விற்பனையாக, மக்களுக்கு வரும் ஜூன் இரண்டாம் வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment