உயிரை பறித்த "மிஸ்டுகால்'

வால்பாறை அருகே "மிஸ்டுகால்' பிரச்னையால் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்க வந்த போலீசாரை மக்கள் முற்றுகையிட்டனர்.

வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை இடது கரையை சேர்ந்தவர் தெய்வானை. இவரது மகன் பரமசிவன்(16). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது மொபைல்போனிலிருந்து ஒரு பெண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தார் அவனிடம் கேட்டதற்கு முறையான முகவரி சொல்லாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனிடையே வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 26ம் தேதி சேடல்டேமில் உள்ள பரமசிவனின் வீடு புகுந்து தாக்கியதாகவும், தடுக்க வந்த அவரது தாயாரையும் தாக்கியுள்ளதாக கூறப் படுகிறது.

கண் எதிரே தன்னால் தாய் தாக்கப்பட்டதால் மனம் உடைந்த போன பரமசிவன், நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரது உடலை மீட்க சென்ற முடீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசாரை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் தான் பிணத்தை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



நேற்று அதிகாலை வால்பாறை இன்ஸ்பெக்டர் சண்முகையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனை தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

இதையடுத்து நேற்று அதிகாலை 5.00 மணிக்கு மாணவரது உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.பரமசிவத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த, ராதாகிருஷ்ணன், சரவணபாண்டியன், ரவி, காளிமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails