இன்டர்நெட் இணைப்புடன் நோக்கியா போன்கள்

மொபைல் போனை முதன் முதலில் பயன்படுத்துவோருக்காக, குறைந்த விலையில் நான்கு போன்களை நோக்கியா நிறுவனம் அண்மையில் தமிழ்நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. நோக்கியா 2690, நோக்கியா 1800, நோக்கியா 1616 மற்றும் நோக்கியா 1280 என்ற நான்கு மாடல்கள் வந்துள்ளன.

நோக்கியா 2690ல் இன்டர்நெட் இணைப்பு, மியூசிக் பிளேயர், 22 நாட்கள் வரை தாங்கக் கூடிய பேட்டரி, பிளாஷ் லைட், தூசு புகாத கீ பேட், ஸ்கிராட்ச் விழாத கவர், ஒன்றுக்கு மேற்பட்ட போன் புக், உள்ளூர் மொழிகளில் நேரம் சொல்லும் கடிகாரம் எனப் பல கூடுதல் வசதிகளுடன் இவை வந்துள்ளன.

இதன் போன் மெமரியை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நோக்கியா லைப் டூல்ஸ், இன்டர்நெட் பிரவுசிங், விஜிஏ கேமரா, எம்பி 3மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ எனப் பல வசதிகள் உள்ளன. இதன் குறியீட்டு விலை ரூ. 2,749.

நோக்கியா 1800 மாடலில் எப்.எம். ரேடியோ, பிரிபெய்ட் ட்ரேக்கர், பிளாஷ் லைட், ஸ்கிராட்ச் விழாத கவர், தூசி புகாத கீ பேட் மற்றும் 22 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,800 என்ற அளவில் இருக்கலாம்.

நோக்கியா 1616 போனில் பெரிய அளவிலான வண்ண டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. நோக்கியா லைப் டூல்ஸ் உட்பட பல நவீன வசதிகள் பதிந்து தரப்பட்டுள்ளன. இதிலும் ஸ்கிராட்ச் விழாத கவர் மற்றும் தூசு புகாத கீ பேட் உள்ளன. விலை இன்னும் தெரியவில்லை.

பரபரப்பாக இயங்கி வரும் மொபைல் சந்தையில், நோக்கியாவின் மிகக் குறைந்த விலை புதிய போனாக, நோக்கியா 1280 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1,300 ஆக இருக்கலாம்.

தற்போது நோக்கியா 2690 மட்டுமே கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மற்றவை சில வாரங்களில் கிடைக்கும். தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு ஊர்களில் உள்ள கடைகளில் கூட இவை கிடைக்கும் வகையில் நோக்கியா விற்பனை ஏற்பாடுகளை இந்த நான்கு போன்களுக்கும் மேற்கொண்டுள்ளது.

இந்த மூன்று போன்களும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails