Monday, May 10, 2010

புதிய மொபைல் லாவா ஏ9 (A9)

இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா இண்டர்நேஷனல், அண்மையில் தன் லாவா ஏ9 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒரு பார் டைப் போன். சிகப்பு மற்றும் கிரே கலர் இணைந்து அழகான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை வண்ணத்திலும் இது வெளிவந்துள்ளது.

இணைய தேடலுக்கு ஆப்பரா மினி பிரவுசர் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப நிம்பஸ் தொகுப்புகள் பதியப்பட்டு தரப்படுகின்றன. எளிமையான, வேகமான இணையத் தேடலுக்கு வாப் 2 (WAP 2.0) GPRS ற்றும் EDGE தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது.

240 x 320 பிக்ஸெல்களுடன் கூடிய 2.4 அங்குல டி.எப்.டி. திரை, 256 எம்பி மெமரி, 8 ஜிபி கார்ட் வரை இயக்கக் கூடிய மெமரி கார்ட் ஸ்லாட், 1000 முகவரி கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், 250 எஸ்.எம்.எஸ். தேக்கக் கூடிய திறன், வீடியோ ரெகார்ட் செய்து இயக்கக் கூடிய 3.5 எம்பி கேமரா, எப்.எம். ரேடியோ, ஹேண்ட்ஸ் பிரீ ஸ்பீக்கர் போன், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.அனுப்பும் திறன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

இதனுடன் தரப்படும் 920 mAh பேட்டரி 2.5 மணி நேரம் பேசக்கூடிய வசதி, 200 மணி நேரம் வரை தாங்கக் கூடிய சக்தியைத் தருகிறது. இந்த போனின் விலை ரூ.5,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...