செல்போனில் பேஸ்புக் சேவையை வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்கும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீடியோகான் மொபைல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி சுனீல் டான்டன் தெரிவித்துள்ளார்.
இதன்படி பேஸ்புக்.காம் எனும் இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடலாம். விரைவாக உரையாடுவதற்காக இதில் படங்கள், கிராபிக்ஸ் எதுவும் இருக்காது. இது இலவச சேவையாகும்.
இதேபோல ரிலையன்ஸ் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய சேவையை அளித்துள்ளது.
பேஸ்புக் இணையதளம் மூலம் சமூக வலைத்தளத்துடன் தொடர்பு கொள்வதற்கு கட்டணம் கிடையாது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு பிரிவின் தலைவர் அனில் பாண்டே தெரிவித்தார்.
0 comments:
Post a Comment