சொல்லின் உச்சரிப்பும் பொருளும்

ஆங்கிலச் சொற்களைக் கையாள்வதில் பல முனைகளில் நாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். முதலாவதாக அதன் ஸ்பெல்லிங். நாம் அதனை உச்சரிக்கும் முறைக்கும் அதில் உள்ள எழுத்துக்களுக்கும் தொடர்பிருக்காது.

அடுத்ததாக அதன் பொருள். இது ஒரு பொதுவான பிரச்சினை. அடுத்து அதனை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்பது. இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வை ஓர் தளம் தருகிறது. அதன் முகவரி www.ask.com.

நீங்கள் ஏதேனும் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கலாம். அதில் குறிப்பிட்ட ஒரு சொல்லின் பொருள் சரியாகத் தெரியாமல் இருக்கலாம்.உடனே இந்த தளம் சென்று இந்த தளம் சென்று define WORD_TO_DEFINE என்று கொடுக்கவும்.

இதில் WORD_TO_DEFINE என்ற இடத்தில் நீங்கள் பொருள் காண விரும்பும் சொல்லைக் கொடுக்க வேண்டும். சில வேளைகளில் சொல்லை மட்டும் டைப் செய்தால் போதும். இதே தேடுதலை definition WORD_TO_ DEFINE என்றும் கொடுக்கலாம்.

சொல்லுக்கான பொருளைத் தேடி இந்த தளம் உடனே வழங்கும். மேலும் அதன் உச்சரிப்பினையும் தரும். நீங்கள் ஹெட் செட் போன் அல்லது ஸ்பீக்கரில் இதைக் கேட்டு பழகிக் கொள்ளலாம். ஸ்பீக்கரில் கேட்க லிங்க் ஒன்று இந்த தளத்தில் தரப்படுகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails