டைப்பிங் வேகம் கணக்கிட

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களால் சராசரியாக டைப் செய்திட முடியும்.

இல்லை, எனக்கு சுமாராகத்தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது.

எனக்கு எழுத்துக்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில்லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள்.

எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக டைப் செய்திடும் திறன் உள்ளவர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் தங்களின் வேகத்திறனை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம் உள்ளது.

இதன் முகவரிhttp://www.typeonline.co.uk/typingspeed.php இந்த தளம் சென்றால் இங்கு உங்களின் டைப்பிங் வேகம் தெரிந்து கொள்ள பாடம் தரப்படும். முதலில் ஒரு டெக்ஸ்ட் இருக்கும்.

கீழாக அதே டெக்ஸ்ட்டினை டைப் செய்திட ஒரு கட்டம் தரப்பட்டிருக்கும். மேலே உள்ள கட்டத்தில் டைப் வேகத்தைக் கணக்கிட டெக்ஸ்ட்டுடன் ஒரு கடிகாரத்திற்கான லிங்க் இருக்கும்.

தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் என இரண்டு லிங்க் இருக்கும். தொடங்கிவிட்டு நீங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடத் தொடங்கலாம். முடித்தவுடனோ அல்லது இடையேயோ டைப் செய்வதை நிறுத்திவிட்டு கடிகாரத்தையும் நிறுத்த வேண்டும்.


உடனே உங்கள் டைப்பிங் ஸ்பீட் என்னவென்று நிமிடத்திற்கு இத்தனை சொற்கள் என்று காட்டப்படும். மேலும் நீங்கள் டைப் செய்ததில் எந்த சொல்லில் எழுத்துப் பிழைகள் ஏற்படுத்தினீர்கள் என்றும் காட்டப்படும்.


இடது புறம் கீ போர்டு பழக, சொற்கள் மற்றும் எண்களைத் தனித்தனியாகவும் இணைந்தும் டைப் செய்திட பழக என லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். கிளிக் செய்து தேவையான பாடங்களை எடுத்துப் பழகலாம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails