எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட் - ஆஃப் 197.75

எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 197.75-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட் - ஆஃப் மதிப்பெண் 196.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் பொதுப் பிரிவினருக்கு உரிய 460 இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 393 இடங்களின் அடிப்படையில் கட் - ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வெளியிட்டார்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 14,321 மாணவர்கள் விண்ணப்பித்தனர்; இவர்களில் 8,873 பேர் மாணவிகள்; 5,064 பேர் மாணவர்கள்.

தகுதியற்ற 384 விண்ணப்பங்கள் போக, 13,937 விண்ணப்பங்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம், சுகாதாரத் துறையின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கட் - ஆஃப் எவ்வளவு? 2009-10-ம் ஆண்டுக்கு வகுப்பு வாரியாக எம்.பி.பி.எஸ். கட் - ஆஃப் விவரம்: பொதுப் பிரிவு - 197.75; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 196.25; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - 196.25. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பொருத்தவரை கட் - ஆஃப் மதிப்பெண் 192.5-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கவுன்சலிங்கில் மாணவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் மேலே குறிப்பிட்ட கட் - ஆஃப் மதிப்பெண்கள் மிகச் சிறிய அளவுக்குக் குறைய வாய்ப்பு உண்டு.

6 மாணவர்கள், 2 மாணவிகள் சிறப்பிடம்: 2009-10-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் மயிலாடுதுறை ஏ.ஆர்.சி. காமாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கார்த்திகா சங்கர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி 200-க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

7 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ள 8 மாணவர்களில் 7 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பிடம் பெற்ற 8 பேர்

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று முதல் 8 இடங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விவரம்:-

1. மாணவி கார்த்திகா சங்கர் - மயிலாடுதுறை; 2. பாலாஜி பிரதீப் - காஞ்சிபுரம் மாவட்டம்; 3. எம்.ஏ. கார்த்திகேயன் - ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்; 4. என். தேவசேனா - நாமக்கல் மாவட்டம்; 5. எஸ். விக்னேஷ் - திருப்பூர்; 6. டி. கார்த்திகேயன் - சேலம்; 7. வி. பழனிசாமி - மேட்டூர் தாலுகா, சேலம்; 8. வர்ஷிணி ரமேஷ் - சென்னை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails