உலகத் தரம் வாய்ந்த சவீதா பல்கலைக்கழகம்

சவீதா பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்த கல்வியை மருத்துவத் துறையிலும் பொறியியல் துறையிலும் வழங்கி உலக அளவில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. 1986-ம் ஆண்டு ஒரு டிரஸ்ட் வடிவில் தொடங்கப்பட்டு இப்போது பெரும் பல்கலைக் கழகமாக விளங்குகிறது.

சென்னையில் இரண்டு வளாகங்களில் மொத்தமாக 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பல்கலைக் கழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, உடலியக்க மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியன உள்ளன.

பெருவாரியான துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஐநஞ சான்றிதழ், சஅஅஇ தரம் ஆயணண் சான்றிதழ் போன்றவற்றையும் முறையாகப் பெற்றுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் துறை இரண்டிலுமே உலகத் தரமான கல்வியையும் ஆய்வு வசதியையும் மாணவர்களுக்கு வழங்கி நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் என்றார்கள் அதன் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், துணைவேந்தர் டாக்டர் ஆர். ராஜகோபால் ஆகியோர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails