ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் 2 புதிய திட்டம் அறிமுகம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களுக்கென இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்டிவி 199 மற்றும் எஸ்டிவி 299 என்ற இந்த இவ்விரு திட்டங்கள் மூலம் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருடன் எத்தனை முறை வேண்டுமானாலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

இதுவரை இத்தகைய வசதி பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. தற்போது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களிடம் மட்டும் பேசுவோர் மாதக்கட்டணம் ரூ. 199 செலுத்தி எஸ்டிவி 199 திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரிலையன்ஸ் மொபைல்போன் மட்டுமின்றி சிடிஎம்ஏ மொபைல்போனுடன் தொடர்பு கொள்வோர் ரூ. 299 கட்டணத்தில் எஸ்டிவி 299 திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட விரிவான ஆய்வின் முடிவில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails