இலவசமாக பல பிரவுசர்கள் கிடைப்பதால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்கத் தொடங்கிவிட்டனர்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், சபாரி ஆகிய பிரவுசர்கள் பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டன. இருந்தாலும் ஒன்று பிடிக்காமால் போகையில் இன்னொன்றுக்கு உடனே மாற இயலாது.
டெஸ்க் டாப் அல்லது குயிக் லாஞ்ச் சென்று கிளிக் செய்து இயக்கி பின் இன்டர்நெட் சைட் காண்பதைத் தொடங்க வேண்டும். பெரும்பாலும் நாம் ஒரு பிரவுசருக்கு அடிமையாகி விட்டோம் என்றால் அதனையேதான் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.
இதற்குக் காரணம் பழகிப் போன சூழ்நிலைதான். ஆனால் வெப் சைட்டுகளை உருவாக்கும் புரோகிராமர்கள் அனைத்து பிரவுசர்களையும் தங்கள் சிஸ்டங்களில் வைத்து அடுத்தடுத்து இயக்குவார்கள்.
ஏனென்றால் இவர்கள் உருவாக்கும் தளங்கள் அனைத்து பிரவுசர்களிலும் இயங்குவதனை உறுதி செய்திட வேண்டிய கட்டாயம். இந்த பிரவுசர் மாற்றத்தை எளிதாக்கிட சில புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
அண்மையில் இணையத்தில் அவ்வாறு கிடைத்த புரோகிராம் Browser Tray Switch. இந்த புரோகிராம் உங்களுடைய சிஸ்டத்தில் 90 கேபி இடமே எடுத்துக் கொள்ளும்.
ஒரு பிரவுசரிலிருந்து இன்னொரு பிரவுசருக்கு மாறுவதை மிக எளிதாகத் தருவதில் தான் இதன் சிறப்பு உள்ளது. இதனைப் பெறhttp://www.donationcoder.com/Software/Mouser/browsertray/index.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
இதனை டவுண்லோட் செய்வதற்கும் அதன் பின் இன்ஸ்டால் செய்வதற்கும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகிறது. இன்ஸ்டலேஷன் ஆன பின் ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் பிரவுசரை மாற்ற வேண்டும் என்றால் ரைட் கிளிக் செய்திட வேண்டியதுதான்.
உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட பைல்களும் தள முகவரிகளும் நீங்கள் தேர்ந் தெடுத்த பிரவுசரில் திறக்கப்படும். பிரவுசர் மாற்றத் திற்கு உதவுவது மட்டுமின்றி இது உங்கள் சிஸ்டத்தைப் பாதுகாப் பாக வைத்திருக்கவும் உதவுகிறது
0 comments:
Post a Comment