சாம்சங் தரும் விண்டோஸ் 7 நோட்புக்

என் 140 என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆறு செல்கள் அடங்கிய இதன் பேட்டரி 11 மணி நேரம் தொடர்ந்து பவர் அளிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

இதன் திரை 10.1 அங்குல அகலத்தில் பள பளப்பில்லாமல் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் இருக்கிறது. 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன.

யு.எஸ்.பி.2, புளுடூத் 2.1, 3 இன் 1 மெமரி கார்ட் ரீடர், நெட்புக் கம்ப்யூட்டரை ஆப் ஷட் டவுண் செய்த பின்னரும் மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களை சார்ஜ் செய்யக்கூடிய யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இதில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் 250 ஜிபி திறன் கொண்டது. இந்த நெட்புக் கம்ப்யூட்டருக்கு சர்வீஸ் தேவைப்பட்டால் சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர் இடத்திற்கே வந்து எடுத்துச் செல்லும் சேவையை மெட்ரோ நகரங்களில் வழங்கி வருகிறது.

ஓராண்டு வாரண்டியுடன் வரும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர் விலை ரூ. 24,990

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails